மனைவி ஷ்ரேயாவின் காலை உடைத்த ‘ராஜா ராணி 2’ சரவணன் – அலறும் நடிகை! – வைரலாகும் வீடியோ!
ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்து அவரது மனைவியுடன் ஒரு மாலுக்கு சென்றுள்ளார். அப்போது ஷ்ரேயாவின் காலை சித்து உடைத்துவிடுவது போன்றும், ஸ்ரேயா வழியில் கதறும்படியான வீடியோ வெளியாகியுள்ளது.
ராஜா ராணி சரவணன்:
ஒரே சீரியலில் அறிமுகமாகி ஒன்றாக நடித்து காதல் வசப்பட்டு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணமும் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் ஆலியா – சஞ்சீவ், ஆர்யன் – ஷபானா முதலான ஜோடிகளை சொல்லலாம். இவர்கள் மட்டுமல்லாமல் கலர்ஸ் தொலைக்காட்சியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலமாக காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் சித்து மற்றும் ஷ்ரேயா.
கண்ணனை கண்டு கொள்ளாததால் மூர்த்தியிடம் சண்டையிடும் ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
இவர்கள் பெற்றோரின் தலைமையில் கடந்த நவம்பர் 21 ஆம் தேதியில் காதல் திருமணம் செய்துகொண்டனர். சித்து மற்றும் ஷ்ரேயாவின் ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதால் மீண்டும் மற்றொரு சீரியலில் இணைந்து நடிக்கும்படி கேட்டு கொண்டுள்ளனர். தற்போது சித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். மேலும், ஸ்ரேயா விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அன்பே குஷி திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அன்பே குஷி சீரியல் நிறைவடைந்ததால் தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் ரஜ்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
அடிக்கடி வெளியூர் பயணங்கள், சுற்றுலா என எங்கு சென்றாலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைப்பக்கங்களில் பதிவிட்டபடி இருக்கின்றனர். சமீபத்தில் கூட சித்துவிற்கு சிறந்த மகனுக்கான விருது கிடைத்தது. அந்த வீடியோவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தனர். மேலும், தற்போது ஒரு மாலுக்கு சிந்துவும் ஸ்ரேயாவும் சென்றிருக்கின்றனர். அப்போது பொருட்கள் வாங்கி வைக்கும் வண்டியில் ஸ்ரேயா அமர்ந்து சித்து அந்த வண்டியை தள்ளுகிறார். அப்போது அந்த வண்டி சக்கரத்தில் ஷ்ரேயாவின் காலில் சிக்கி ஸ்ரேயா அலறுகிறார். இந்த வீடியோ தற்போது யூடியூப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.