கண்ணனை கண்டு கொள்ளாததால் மூர்த்தியிடம் சண்டையிடும் ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

0
கண்ணனை கண்டு கொள்ளாததால் மூர்த்தியிடம் சண்டையிடும் ஐஸ்வர்யா - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த எபிசோட்!
கண்ணனை கண்டு கொள்ளாததால் மூர்த்தியிடம் சண்டையிடும் ஐஸ்வர்யா - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த எபிசோட்!
கண்ணனை கண்டு கொள்ளாததால் மூர்த்தியிடம் சண்டையிடும் ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

முல்லையின் செயற்கைமுறை கருவுறுதலுக்கு குடும்பத்தார்கள் 5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். இந்நிலையில் கண்ணன் மேற்படிப்புக்காக மூர்த்தி இடம் காசு கேட்கிறார். மூர்த்தி கண்ணன் கூறியதை காது கொடுத்து கூட கேட்காததால் ஐஸ்வர்யா சண்டையிடும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை வெற்றியை கொடுக்குமா அல்லது மீண்டும் 5 லட்சம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது முல்லையால் இயற்கையாக கருவுறு முடியாது என்பதனை தொடர்ந்து செயற்கை முறையின் மூலமாக சிகிச்சை எடுக்க இருக்கிறார்கள். ஆனால் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சைக்கு குறைந்தது 5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர் கூறிவிடுகிறார்.

சந்தர்ப்ப சூழலால் அம்ரிதாவை திருமணம் செய்துகொள்ளும் எழில் – பாக்கியா ஏற்றுக்கொள்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!

பின்பு எப்படியோ மூர்த்தியும் ஜீவாவும் சேர்ந்து கஷ்டப்பட்டு ஐந்து லட்சத்தை ரெடி செய்கிறார்கள். இந்த வாரத்தில் இருந்து முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தொடங்க இருக்கிறது. ஆனால் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை கண்டிப்பாக வெற்றியைத்தான் கொடுக்கும் என்பது நிச்சயமல்ல. ஒருவேளை தோல்வி அடைந்து விட்டால் மீண்டும் 5 லட்சம் கட்டி முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும். ஒரு முறை ஐந்து லட்சம் பிரட்டவே குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார்கள்.

Exams Daily Mobile App Download

மீண்டும் ஐந்து லட்சத்தை கட்ட வேண்டும் என்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு முடியாத ஒன்றாகும். இந்நிலையில் கண்ணன் மேற்படிப்பு படிக்க வேண்டும் என விருப்பபடுகிறார். இதனை மூர்த்தியிடம் தெரிவித்தபோதும் மேற்படிப்புக்கு அதிகமாக செலவாகும் தற்போதுதான் முல்லைக்கு 5 லட்சம் வரை செலவு செய்திருக்கிறோம் என கூறி விடுகிறார். உடனே ஐஸ்வர்யாவிற்கு கோபம் வந்துவிடுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும். முல்லைக்கு மட்டும் ஐந்து லட்சத்தை செலவு செய்துவிட்டு கண்ணனை படிக்க வேண்டாம் சொல்வது எல்லாம் நியாயமா என ஐஸ்வர்யா கோவப்படும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here