ஆலியாவின் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட ‘ராஜா ராணி சீசன் 2’ குழுவினர் – வைரலாகும் வீடியோ!

0
ஆலியாவின் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட 'ராஜா ராணி சீசன் 2' குழுவினர் - வைரலாகும் வீடியோ!
ஆலியாவின் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட 'ராஜா ராணி சீசன் 2' குழுவினர் - வைரலாகும் வீடியோ!
ஆலியாவின் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட ‘ராஜா ராணி சீசன் 2’ குழுவினர் – வைரலாகும் வீடியோ!

ஆலியாவின் வளைகாப்பு விழா, ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அந்த வளைகாப்பு விழாவில் ராஜா ராணி சீசன் 2 தொடரில் ஆலியாவுடன் நடித்து வந்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆலியாவின் வளைகாப்பு:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். ராஜா ராணி தொடரில் நடித்து கொண்டிருந்த போதே இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பிறந்ததிற்கு பிறகு ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

பாக்கியாவை மாட்டி விடும் கோபி, கைது செய்யும் போலீசார் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

ராஜா ராணி தொடரில் நடித்து கொண்டிருந்த போதே இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஆலியா மானசா சீரியலை விட்டு விலகுவார் என எதிர்ப்பார்த்த சமயத்தில் 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் கூட தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். பின்பு பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கு வளைகாப்பை நடத்தினர்.

தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்ற ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆலியாவின் சீரியல் நண்பர்கள் மற்றும் சஞ்சீவ்வின் சீரியல் நண்பர்கள் என அனைவரும் ஐலா பாப்பாவின் பிறந்தநாள் மற்றும் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டனர். அதாவது ஆலியா நடித்து வந்த ராஜா ராணி சீசன் 2 தொடரில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் சரவணன் மற்றும் சந்தியாவின் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சிவகாமி என அனைவரும் கலந்துகொண்டனர். அந்த வீடியோவை ஆலியா தற்போது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!