தன்னுடைய சந்தோஷமான தருணத்தை வீடியோவாக வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ், நீண்ட நாட்களுக்கு பின் மிகவும் சந்தோசமாக இருப்பதாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் ரொம்ப நாட்களுக்கு பின் ஈவென்ட் சென்று இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறி வருகிறது. மூர்த்தி பல கஷ்டங்களை தாண்டி முல்லைக்கு டிரீட்மென்ட் செய்ய வேண்டும் என்பதால் பல இடங்களில் கடன் வாங்கி மருத்துவமனைக்கு போக சொல்கிறார். அண்ணனின் கஷ்டத்தை பார்த்து கதிர் வருத்தப்படுகிறார். இந்நிலையில் மீனாவிற்கு இவ்வளவு பணம் செலவு செய்வது பிடிக்கவில்லை. அதனால் குடும்பத்தில் எதாவது பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்கியாவின் தொழிலை கவனிக்க சமையல்காரராக மாறும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வருபவை!
வில்லன் இல்லாத சீரியலில் அவ்வப்போது வில்லத்தனம் செய்து நான் தான் வில்லி என பதிவு செய்வார். மீனாவாக நடித்து வரும் ஹேமாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஹேமா பல சீரியலில் நடித்து இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கதாபாத்திரம் தான் தனி அங்கீகாரம் கொடுத்தது. இந்நிலையில் ஹேமா தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏகப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார்.
ExamsDaily Mobile App Download
இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் நீண்ட நாட்களுக்கு பின் மிகவும் சந்தோசமாக இருப்பதாக பதிவிட்டு இருக்கிறார். அதாவது அவர் பல நாட்களுக்கு பின் ஈவென்ட் சென்று இருப்பதாகவும் அது அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும்பதிவிட்டுள்ளார். மேலும் மேடையில் அவர் பேசிய வீடியோ ஒன்றையும் அதில் இணைத்து இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி இருக்கிறது. மேலும் ஏகப்பட்ட ரசிகர்கள் அவருடைய வீடியோ எப்போ வரும் என காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.