‘கொடி’ தனுஷ் & திரிஷாவாக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம், கண்ணன் – வைரலாகும் வீடியோ!

0
'கொடி' தனுஷ் & திரிஷாவாக மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம், கண்ணன் - வைரலாகும் வீடியோ!
'கொடி' தனுஷ் & திரிஷாவாக மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம், கண்ணன் - வைரலாகும் வீடியோ!
‘கொடி’ தனுஷ் & திரிஷாவாக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம், கண்ணன் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் சரவண விக்ரம் தனுஷாகவும், நடிகை சுஜிதா திரிஷாவாகவும் மாறி ‘கொடி’ திரைப்பட பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சீரியல்களில் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள், எப்போதும் பழிவாங்கி கொண்டிருக்கும் மாமியார், சூழ்ச்சி செய்யும் வில்லி என்ற கதைக்களத்திற்கு மத்தியில் இது நம்ம வீட்டில் நடக்கிற விஷயம் தானே என்று சொல்ல வைக்கும் ஒரு சீரியல் என்றால் அது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தான். வழக்கமான சீரியல் பாணியை தாண்டி ஒரு குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அழகாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதையை முடிக்கும் எழில் – அமிர்தாவுடன் திருமணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்களுக்கு எவ்வளவு பரீட்சயமோ அந்த அளவுக்கு இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளும் பிரபலமாக இருந்து வருகின்றனர். இதற்கு ஒரு சான்றாக இருப்பது, சமூக வலைதளங்களில் இவர்களை பின்தொடரும் பாலோயர்ஸ் எண்ணிக்கையை பார்த்தாலே தெரிந்துவிடும். இன்றைய காலத்தில், சினிமா அல்லது சீரியல் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த சமூக ஊடகம் மூலமாகவே பலருக்கும், நடிப்பதற்கான வாய்ப்பு கூட கிடைக்கிறது.

இப்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலங்களை எடுத்துக்கொண்டால், இதில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் தங்களது பெயரில் சமூக வலைதள கணக்குகளை வைத்திருக்கின்றனர். இந்த கணக்கில், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள், பேமிலி தொடர்பான நிகழ்வுகள் என அத்தனையையும் இவர்கள் ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் அண்ணியாக நடித்து வரும் நடிகை சுஜிதா மற்றும் கண்ணனாக வரும் நடிகர் சரவண விக்ரம் இருவரும் சேர்ந்து நடிகர் தனுஷின் ‘கொடி’ திரைப்படத்தில் வரும் பிரபலமான பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து அதனை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!