‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் வீட்டிற்கே சென்ற ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவின் வீட்டிற்கே சென்ற ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவின் வீட்டிற்கே சென்ற ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் வீட்டிற்கே சென்ற ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து கொண்டிருக்கும் ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை சம்பாரித்துள்ளார். இந்நிலையில் இவரது ரசிகர்கள் ஹேமாவின் வீட்டிற்கே சென்று கேக் வெட்டி ஹேமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

ஷாக் கொடுத்த ரசிகர்கள்:

சன், ஜீ மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். சீரியல்களை விட சீரியல்களில் நடித்துவரும் பிரபலங்களுக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டங்கள் இருக்கின்றனர். வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர் கூட்டங்களை விட சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் படப்பிடிப்பு போக மீத நேரம் முழுவதையும் சமூக வலை பக்கங்களில் தான் செலவிட்டு வருகின்றனர்.

ஆல்யா வளைகாப்பில் படையப்பா ஸ்டைலில் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் ஹேமா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் ஜீவாவிற்கு மனைவியாக நடித்து வருகிறார். இவர் படப்பிடிப்பு போக மீத நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைந்து ரீல்ஸ் மற்றும் புகைப்படம் எடுத்து அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டபடி இருப்பார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமல்லாமல் யூடியூப் பக்கத்திலும் ஷூட்டிங் வீடியோவினை பதிவிட்டபடி இருப்பார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை சம்பாரித்தார். அந்த மகிழ்ச்சியை தனது ரசிகர்களோடு சேர்ந்து கொண்டாடும் விதமாக என்னை இந்த அளவுக்கு ஊக்கப்படுத்தி ஒரு மில்லியன் ரசிகர்களை கொடுத்ததற்கு நன்றி என ஒரு பதிவினையும் வெளியிட்டுருந்தார். தற்போது ஹேமாவின் ரசிகர்கள் சிலர் இந்த ஒரு மில்லியனை கொண்டாடும் விதமாக ஹேமாவின் வீட்டிற்கே சென்று ஹேமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். கேக் வெட்டி கொண்டாடி ஹேமாவினை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!