IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பிளேயிங் 11 அணி – ஆகாஷ் சோப்ரா கருத்து!

0
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பிளேயிங் 11 அணி - ஆகாஷ் சோப்ரா கருத்து!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பிளேயிங் 11 அணி - ஆகாஷ் சோப்ரா கருத்து!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பிளேயிங் 11 அணி – ஆகாஷ் சோப்ரா கருத்து!

வரவிருக்கும் IPL 2022 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான முதல் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் அணியில் இவர்கள் விளையாட வாய்ப்புள்ளது என்று முன்னாள் இந்திய தொடக்க பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

IPL போட்டிகள்

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மறுநாள் துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி களமிறங்க இருக்கிறது. இப்போது CSK அணியில் இருந்து தீபக் சஹார் விலகி இருக்கும் நிலையில், மொயீன் அலி, டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் முதல் ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பில்லை என்ற தகவல் உறுதியாகி இருக்கிறது. அதனால் முதல் போட்டியில் களமிறங்கும் CSK பிளேயிங் 11 அணியை தயார் செய்வதில் தோனிக்கு சிக்கல்கள் எழுந்திருக்கிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஸ்மார்ட் கார்டு சேவைகள்! முழு விவரம்!

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது. இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ‘இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி தொடக்க ஆட்டத்தில் கிடைக்கவில்லை என்றால், முதல் போட்டிக்கு வெளிநாட்டு வீரராக களமிறங்குவது டெவோன் கான்வேயாக இருக்கலாம். ருதுராஜ் கெய்க்வாட் உடன் டெவோன் கான்வே ஓப்பன் செய்வார். தொடர்ந்து நம்பர் 3ல், மொயீன் அலி இல்லை என்றால், ராபின் உத்தப்பா சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

அதன்பிறகு, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபே ஆகியோரை தொடர்ந்து எம்.எஸ். தோனி 7வது இடத்தில் இருப்பார். என் கருத்துப்படி, CSK அணிக்கு சிவம் துபே ஒரு நல்ல கொள்முதல். இது அவருக்கு ஒரு மேக் அல்லது பிரேக் சீசனாக இருக்கும். அதன் பிறகு, டுவைன் பிராவோ, ஹங்கர்கேகர், கிறிஸ் ஜோர்டான் மற்றும் ஆடம் மில்னே ஆகியோரை எனது உத்தேச 11 அணியில் வைத்துள்ளேன். எனது நான்கு வெளிநாட்டு வீரர்களின் சாய்ஸ் டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான் மற்றும் டெவோன் கான்வேயாக உள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்துப்படி CSK அணி பிளேயிங் 11 அணியை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!