தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஸ்மார்ட் கார்டு சேவைகள்! முழு விவரம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஸ்மார்ட் கார்டு சேவைகள்! முழு விவரம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஸ்மார்ட் கார்டு சேவைகள்! முழு விவரம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஸ்மார்ட் கார்டு சேவைகள்! முழு விவரம்!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் புதிய குடும்ப உறுப்பினரைச் சேர்க்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள குடும்ப உறுப்பினரை நீக்கலாம். இதற்காக, விண்ணப்பதாரர்கள் TNPDS ஸ்மார்ட் கார்டு தொடர்பான சேவைகளை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு விவரம்:

தமிழகத்தில் முக்கிய ஆவணமாக உள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினரை பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல் போன்ற செயல்முறைகள் குறித்து பல குழப்பங்கள் இருந்து வந்தது. மேலும் இதற்காக அலுவலகத்திற்கு அலைய வேண்டுமோ? என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் இருந்தது. இந்த குழப்பத்திற்கு பதில் அளிக்கும் விதமாக நாம் வீட்டில் இருந்தபடியே இந்த முறைகளை எளிமையாக ஆன்லைனில் செய்யலாம்.

குடும்ப உறுப்பினரைச் சேர்த்தல்:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpds.gov.in ஐ பார்வையிட வேண்டும்.

‘ஸ்மார்ட் கார்டு தொடர்பான சேவைகள்’ பிரிவின் கீழ் உள்ள “உறுப்பினரைச் சேர்” இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினரின் பெயரைப் பெற, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் அவரது புகைப்படத்துடன் புதிய குடும்ப உறுப்பினரின் விவரங்களை உள்ளிடவும்.

குடும்ப உறுப்பினரை நீக்குதல்:

ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினரின் பெயரை நீக்க, tnpds.gov.in தளத்தில் “ஸ்மார்ட் கார்டு தொடர்பான சேவைகள்” பிரிவின் கீழ் உள்ள “குடும்ப உறுப்பினரை அகற்று” இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஏற்கனவே உள்ள குடும்ப உறுப்பினரின் விவரங்களைப் பதிவிடவும். அவர்களை ரேஷன் கார்டில் இருந்து விலக்கவும்.

முகவரி மாற்றம்:

tnpds.gov.in தளத்தில் “முகவரியை மாற்ற” இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் புதிய முகவரியைச் சேர்க்கலாம்.

முகவரியைத் திருத்த / புதுப்பிக்க புதிய குடியிருப்புச் சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்.

குடும்பத் தலைவரை மாற்றுதல்:

அனைத்து விண்ணப்பதாரர்களும் இப்போது தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரை மாற்றலாம்.

tnpds.gov.in தளத்தில்“குடும்பத் தலைவரை மாற்ற” என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் புதிய குடும்பத் தலைவரைச் சேர்க்கலாம்.

மேலும் புதிய குடும்பத் தலைவர் விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.

அதன்படி, TNPDS தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டு விவரங்கள் பக்கத்தில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைனில் தான் செயல்படுகிறது. மேலும் குடும்பத் தலைவர் உறுப்பினர் மாற்றம் மற்றும் அட்டை சரண்டர் / ரத்து செய்வதற்கான வசதியும் உள்ளது. விண்ணப்பதாரர்கள் கார்டு தொடர்பான சேவை கோரிக்கை நிலையை சரிபார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு, 1967 அல்லது 1800-425-5901 என்ற பொது விநியோக அமைப்பின் (PDS) கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!