ஆல்யா வளைகாப்பில் படையப்பா ஸ்டைலில் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0
ஆல்யா வளைகாப்பில் படையப்பா ஸ்டைலில் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
ஆல்யா வளைகாப்பில் படையப்பா ஸ்டைலில் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
ஆல்யா வளைகாப்பில் படையப்பா ஸ்டைலில் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் நிலையில், தன்னுடைய மூத்த மகள் பிறந்தநாள் அன்று அவருடைய 9 வது மாத வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது. அதில் அவரது கணவர் சஞ்சீவ் என்ட்ரியாகும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

நடிகை ஆல்யா வளைகாப்பு:

சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சீரியல் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். பிரபலமான நடிகர்களின் வீட்டு விசேஷங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ். இந்த அழகான ஜோடி மட்டுமல்லாமல் அவர்களது மகள் ஐலாவும் தற்போது ட்ரெண்டாக இருக்கிறார். ஐலாவின் அழகான சிரிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!

அவரும் ஆல்யாவும் பல விளம்பர படங்களில் இணைந்து நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். தன்னுடைய 9 மாத கர்ப்பகாலம் வரை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் அவர் நடித்து வந்தார். பிரசவத்திற்கு பின்னர் கூட சீரியலில் நடிப்பேன் என்று உறுதியாக சொன்ன நிலையில், திடீரென அவர் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ரியா என்பவர் சந்தியாவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 20 ஐலாவின் இரண்டாவது பிறந்தநாள் பிரமாண்டமாக நடந்தது. அதில் கூடுதல் சிறப்பாக ஆல்யாவின் 9வது மாத வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அனைவரும் பச்சை நிற உடையில் செம அழகாக இருந்தனர். அதில் ஏகப்பட்ட சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடக்கத்தில் ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் படையப்பா ஸ்டைல்லில் வந்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!