‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்காக மீனா ஹேமாவின் புடவை ஷாப்பிங் – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்காக மீனா ஹேமாவின் புடவை ஷாப்பிங் - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்காக மீனா ஹேமாவின் புடவை ஷாப்பிங் - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்காக மீனா ஹேமாவின் புடவை ஷாப்பிங் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகை ஹேமா இந்த சீரியலுக்கு தேவையான புடவைகளை ஷாப்பிங் செய்து, இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை ஹேமா

தமிழ் டிவி சேனல்களை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு நாளும் பல வகையான கதைக்களங்களுடன் கூடிய நூற்றுக்கணக்கான சீரியல்கள் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சீரியல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகிறதா என்று பார்த்தால் அது சந்தேகமான விஷயம் தான். இருப்பினும், இன்றைய காலத்தில் இருக்கும் ஆடியன்ஸ்களுக்கு ஏற்றபடி, ரொமான்ஸ், சண்டை காட்சிகள், குடும்பப்பாங்கான கதையம்சம் உள்ள சீரியல்கள் எல்லாமே நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக சுமார் 880 எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்களின் பேவரைட்களில் ஒன்றாக இருக்கிறது.

தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு அளித்த விளக்கம்!

குறிப்பாக, வழக்கமான சீரியல்களில் காட்டப்படும் வில்லத்தனம், நெகட்டிவிட்டி என்று இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அழகாக எடுத்து சொல்லி வரும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களின் மனதுக்கு நெருக்கமான ஒன்றாகும். இத்தொடரில் வில்லத்தனம் கலந்த நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல சின்னத்திரை நடிகை ஹேமா. பொதுவாக ஒரு சீரியலை அந்த கதைக்காகவோ, நடிப்பிற்காகவோ பார்க்கும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சில நடிகர், நடிகைகளின் உடைகள், அலங்காரங்கள், அணிகலன்கள் ஆகியவை கூட ரசிகர்களை கவருகின்றது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து வரும் நடிகை ஹேமாவின் உடைகள், அலங்காரங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு தனி ரசிகைகள் கூட்டமே இருக்கிறது. இப்படி இருக்க நடிகை ஹேமா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்காக அணியும் புடவைகளை எப்படி தேர்வு செய்கிறார், அவற்றை எங்கு ஷாப்பிங் செய்கிறார் என்பது குறித்த வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் குறைந்த விலையில் தரமுள்ள புடவைகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்காக நடிகை ஹேமா ஷாப்பிங் செய்யும் காட்சிகள் இடம்பிடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!