அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை! வழிமுறைகள் இதோ!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை! வழிமுறைகள் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை! வழிமுறைகள் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை! வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட்டாக வைத்து கொள்வது அவசியம். தற்போது ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் எவ்வாறு சேர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். இந்த குடும்ப அட்டை தரநிலை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து 5 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெற ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மார்க் மற்றும் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!

தற்போது ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை போன்று ரேஷன் கார்டும் முக்கிய ஆவணமாக உள்ளது. இத்தகைய ஆவணத்தை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். அதாவது புதிய குடும்ப உறுப்பினர்களை சேர்த்தல், மொபைல் எண், குடும்ப உறுப்பினரை நீக்குதல், இறந்தவர்களின் பெயரை நீக்குதல் போன்ற அப்டேட்டுகளை கட்டாயம் செய்ய வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தை அல்லது வீட்டில் திருமணம் செய்து புதிய உறுப்பினர் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்தால், நீங்கள் அவர்களின் பெயர்களை ரேஷன் அட்டையுடன் இணைக்க வேண்டும்.இப்போது, நீங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் உறுப்பினர் பெயரை சேர்க்கலாம்.

  • முதலில் https://tnpds.gov.in/home.xhtml என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இங்கே முதலில் நீங்கள் ஒரு உள்நுழைவு ஐடியை உருவாக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒரு ஐடியை உருவாக்கியிருந்தால், நீங்கள் உள்நுழைய வேண்டும்.
  • அதில் முகப்புப் பக்கத்தில், புதிய உறுப்பினர் பெயரைச் சேர் என்ற விருப்பத்தை தேர்தெடுக்கவும்.
  • அடுத்தாக புதிய உறுப்பினரைப் பற்றிக் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் இங்கே நிரப்பவும்.
Exams Daily Mobile App Download

  • பக்கத்தின் வலது மூலையில் உள்ள உறுப்பினர் சேர்க்கை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது காண்பிக்கப்படும் பக்கத்தில் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
  • தேவையான ஆவணங்களின் நகலையும் படிவத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • சமர்ப்பித்த பிறகு, நீங்கள் ஒவ்வொன்றும் ஒரு பதிவு எண்ணைப் பெறுவீர்கள், அதன் மூலம் இந்த போர்ட்டலில் உங்கள் படிவத்தை கண்காணிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!