அமீரும் பாவனியும் திருமணம் செய்துகொள்ள போகிறார்களா? பிரியங்கா கூறிய அதிர்ச்சி தகவல்!

0

அமீரும் பாவனியும் திருமணம் செய்துகொள்ள போகிறார்களா? பிரியங்கா கூறிய அதிர்ச்சி தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீரும் பாவனியும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அப்போது பிரியங்கா இருவரிடமும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என கேட்பது போலவும் அதற்கு பதில் அளிப்பது போலவும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமீர் திருமணம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சின்னத்தம்பி சீரியலின் மூலமாக எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் தான் பாவனி. இவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் அமீர். அமீர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளிலிருந்தே பாவனியுடன் மட்டுமே பேசி வந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் பேசிக் கொள்வதால் இருவரும் காதலிக்கிறார்கள் என பல வதந்திகள் பரவி கொண்டிருந்தது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதல்வர் சொன்ன ஹாப்பி நியூஸ்!

மற்ற போட்டியாளர்களும் இருவரும் காதலிக்கிறீர்களா என இருவரிடமும் கேட்டபோது சரியான எந்த பதிலும் இருவரும் தரப்பிலிருந்தும் கொடுக்கவில்லை. இதனால் இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்கள் என்றுதான் பரவிக்கொண்டிருந்தது. இதற்கிடையே அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்து விஷயம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாவனியும் அமீரும் பிக் பாஸ் வீட்டில் கடைசிநாள் வரை தாக்கு பிடித்தனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட தொடர்ந்து இருவரும் ஒன்றாக வெளியூர்களுக்கு சென்று வந்தனர். இதனால் இந்த வதந்தி மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேதான் சென்றது.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பாவனியும் அமீரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து கலந்து கொள்வதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தான் அனைவரின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங்கின்போது அமீரிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என பிரியங்கா கேட்கிறார். அதற்கு நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் மட்டுமே எனக் கூறி அனைத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!