‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரயிலை இயக்க தனியாருக்கு அனுமதி – தெற்கு ரயில்வே அதிரடி!!

0
'பாரத் கவுரவ்' சுற்றுலா ரயிலை இயக்க தனியாருக்கு அனுமதி - தெற்கு ரயில்வே அதிரடி!!
'பாரத் கவுரவ்' சுற்றுலா ரயிலை இயக்க தனியாருக்கு அனுமதி - தெற்கு ரயில்வே அதிரடி!!
‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரயிலை இயக்க தனியாருக்கு அனுமதி – தெற்கு ரயில்வே அதிரடி!!

இந்தியாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் நோக்கில் ‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரயில் இயக்க, தனியார் நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த ரயிலில் பயணியர் கட்டணங்களை ஒப்பந்த நிறுவனங்களே முடிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா ரயில்:

இந்தியாவில் பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகளின் வருகை குறைவால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வேத்துறை பெரும் சரிவை சந்தித்து. இந்தியாவில் ரயில் சேவை என்பது அத்தியாவசிய சேவையில் ஒன்றாக இருப்பதால் கொரோனா சற்று குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியது. கடந்த மாதங்களில் பண்டிகை தினங்களை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது.

கயலின் பிறந்தநாளை பெரிதாக கொண்டாட நினைக்கும் ஜனார்த்தனன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!

கடந்த மாதங்களில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது முன்பதிவில்லாத ரயில்களையும் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் நோக்கில், ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயில் இயக்க, தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் நோக்கிலும், ரயில்வேக்கு வருவாய் கிடைக்கும், தனியார் வாயிலாக இந்த ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்த பிறகு ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனாவின் புது ரீல்ஸ் – வைரலாகும் வீடியோ!!

இத்திட்டத்தில், ரயில் பராமரிப்பு மற்றும் நிறுத்துமிடம் போன்ற வசதிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உதவும். ரயில்களை இயக்குவது மட்டுமே தனியார் நிறுவனங்களின் பணி என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் முன்பதிவுக்கு, ஒப்பந்ததாரர் முதலில் 1 லட்சம் ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்தேடுக்கப்படும் விண்ணப்பதாரர் பாதுகாப்பு வைப்புத் தொகையாக, ஒரு பெட்டிக்கு 1 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்ததும், இந்த தொகை ஒப்பந்ததாரருக்கு திருப்பி வழங்கப்படும். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 90031 60955 அல்லது [email protected] முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!