கயலின் பிறந்தநாளை பெரிதாக கொண்டாட நினைக்கும் ஜனார்த்தனன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!

0
கயலின் பிறந்தநாளை பெரிதாக கொண்டாட நினைக்கும் ஜனார்த்தனன் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இன்றைய எபிசோடு!
கயலின் பிறந்தநாளை பெரிதாக கொண்டாட நினைக்கும் ஜனார்த்தனன் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இன்றைய எபிசோடு!
கயலின் பிறந்தநாளை பெரிதாக கொண்டாட நினைக்கும் ஜனார்த்தனன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!

இப்போது கயலின் முதல் பிறந்தநாளை வீட்டில் வைத்து சிறப்பாக கொண்டாடும் படி குடும்பத்தார் அனைவரும் முடிவு செய்ய மீனா ஜீவாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். பிறகு மூர்த்தி வீட்டுக்கு வரும் ஜனார்த்தனன் கண்ணனுக்கு நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இன்றைய எபிசோடில் கயலின் பிறந்த நாளை வீட்டில் வைத்தே பெரிதாக கொண்டாடலாம் என அனைவரும் யோசித்து கொண்டிருக்கின்றனர். அதற்காக உறவினர்களுக்கு மட்டும் சொல்லி வீட்டில் வைத்தே பிறந்த நாளை கொண்டாடலாம், நல்ல கேட்ரிங் ஆர்டர் எடுத்து சிறப்பாக செய்யலாம் என முடிவு செய்கின்றனர். இருந்தாலும் மூர்த்தியின் முடிவால் வருத்தப்படும் மீனா, ஜீவாவிடம் கோபித்து கொள்கிறார். ஆனால் கயலுக்கு காது குத்து வைக்கும் போது சிறப்பாக கொண்டாடலாம் என ஜீவா சொல்ல, மீனா கோபித்து கொண்டு அங்கிருந்து செல்கிறார்.

குழந்தை பிறந்த பிறகு ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனாவின் புது ரீல்ஸ் – வைரலாகும் வீடியோ!!

பிறகு ரூமில் வைத்து தனம் அக்காவின் பையனுக்கு மட்டும் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவார்கள் என மீனா வருத்தப்பட, கயல் தான் இந்த வீட்டின் மூத்த பிள்ளை, அவளுக்கு பிறகு தான் மற்ற குழந்தைகள் எல்லாரும், மூர்த்தி அண்ணனுக்கு பிறகு கயல் தான் எல்லாம் என ஜீவா கொளுத்தி போடுகிறார். இதை கேட்க்கும் மீனாவும் சிரித்து கொண்டே அங்கிருந்து செல்கிறார். காலையில் விடிந்ததும், லட்சுமணனை உத்து பார்த்துக்கொண்டே இருக்கும் மீனா, அவன் காமாட்சி பெரியம்மா மாதிரி இருப்பதாக சொல்கிறார்.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க, ஜனார்த்தனன் மூர்த்தி வீட்டிற்கு வருகிறார். அப்போது கடையில் நடந்ததற்கு மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறார் ஜனார்த்தனன். பிறகு கயலின் பிறந்தநாளை பெரிதாக கொண்டாடுவது பற்றி பேச, அம்மா இறந்து ஒரு வருடம் கழித்து தான் ஆகிறது, அதுவரை கொண்டாட்டங்கள் வேண்டாம் என ஜீவா, மூர்த்தி எல்லாரும் கூற மீனாவையும், கயலையும் வீட்டுக்கு அழைத்து போவதாக சொல்கிறார் ஜனார்த்தனன். பிறகு எல்லாரும் பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைக்கிறார்கள்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! கனமழை எதிரொலி!

தொடர்ந்து, ஜீவாவும், கதிரும் ரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்க, ஜனார்த்தனன் கடையில் பணம் திருடிய பையன் அவர்கள் வழியே குறுக்கிடுகிறான். அப்போது அவனை அழைத்து பேசும் கதிரிடம், உங்க தம்பி ஒழுங்காக இருக்கிறானா, அவனே ஒரு பெண்ணை இழுத்திட்டு வந்து கல்யாணம் செய்திருக்கிறான், எப்படி என்றாலும் ஒரு நாள் அவர்கள் பணத்தை திருடத்தான் போகிறார்கள் என அவன் திமிராக பேச கதிர் ஓங்கி ஒரு அறை விடுகிறார். கதிரிடம் அடி வாங்கிய அந்த பையன், கதிர் மற்றும் ஜீவாவை என்ன செய்கிறேன் பாருங்கள் என மிரட்டி விட்டு போகிறதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here