குழந்தை பிறந்த பிறகு ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனாவின் புது ரீல்ஸ் – வைரலாகும் வீடியோ!!

0
குழந்தை பிறந்த பிறகு 'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவின் புது ரீல்ஸ் - வைரலாகும் வீடியோ!!
குழந்தை பிறந்த பிறகு 'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவின் புது ரீல்ஸ் - வைரலாகும் வீடியோ!!
குழந்தை பிறந்த பிறகு ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனாவின் புது ரீல்ஸ் – வைரலாகும் வீடியோ!!

பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டி வரும் ஃபரீனா, தற்போது குழந்தை பிறந்துள்ளதால், சிறிது நாட்கள் ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக மாறியுள்ளது.

வைரல் வீடியோ:

பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் வில்லியாக நம் அனைவருக்கும் அறிமுகமான ஃபரீனா தற்போது சமீபத்தில் தான் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். ஃபரீனா பல வருடங்களாக சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும் பல முக்கிய தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியவர். இதனால் ஃபரீனாவின் திறமை அனைவரும் அறிந்ததே. அதிலும், சமையல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக அவர் பணியாற்றிய பொழுது அவருக்கென்று தனி ரசிகைகள் கூட்டம் இருந்து வந்தது. ஃபரீனா நிஜ வாழ்க்கையில் மிகவும் கலகலப்பானவர்.

தமிழகத்தில் இன்று (டிச.06) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!

ஆனால் தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் மிரட்டும் வில்லியாக அனைவரையும் மிரட்டி வருகிறார். இதனால் இவருக்கு நெகட்டிவ் பிரபலம் கிடைத்துள்ளது. இதுவே இவர் அந்த வெண்பா கதாபாத்திரத்தை எந்த அளவிற்கு செய்து வருகிறார் என்பதற்கு சான்று. பாரதி கண்ணம்மா தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர். இந்த தொடரில் நடித்ததில் இருந்து ஃபரீனாவின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவி விட்டது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்காக கொலையும் செய்பவராக நடித்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபரீனா நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருந்து வந்தார். அப்போதும், தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். தனது பிரசவத்திற்கு சில நாட்கள் வரையிலும் ஓய்வில்லாமல் நடித்து வந்தார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் ஃபரீனாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சிறிது நாட்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் அவர் நடிக்க தொடங்குவார். ஓய்விலிருக்கும் நேரத்தில் ஃபரீனா அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவுகளை இட்டு வருவார். தற்போது டாக்டர் படத்தின் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதால் வைரலாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!