TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பதவிகள் வாரியான விவரங்கள்!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பதவிகள் வாரியான விவரங்கள்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பதவிகள் வாரியான விவரங்கள்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பதவிகள் வாரியான விவரங்கள்!

TNPSC குரூப் 4 இந்த தேர்வில் வருடந்தோறும் ஏறக்குறைய 5000 பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அரசின் பல்வேறு துறைக்குத் தேவையான பணியாளர்கள் இந்த தேர்வின் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில் தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும் குரூப் 4 தேர்வில் நிரப்பப்படும் பணியிடங்களில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவியில் 274 காலிப் பணியிடங்கள் (குறைவான எண்ணிக்கையிலான பணியிடங்கள்) நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முழு விவரங்கள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புகிறது. இந்த போட்டித் தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். வருடந்தோறும் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 (Village Administrative Officer-VAO) போன்ற தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகள் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த 2 வருடங்களாக போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை, இதனால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் காத்து கொண்டு இருந்தனர். இருப்பினும் தற்போது நிலைமை சரியாகி வருவதால் அண்மையில் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதை அடுத்து குரூப்- 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த தேர்வுக்கு ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வாணைய தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!

குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். ஆனால், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு என எது முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த தேர்வு எழுத 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். குரூப்- 4 தேர்வு ஒரே ஒரு எழுத்து தேர்வாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 7382 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வின் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவியில் 274 காலிப் பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவியில் 3,681 காலிப் பணியிடங்கள், பில் கலெக்டர் பதவியில் 50 காலிப் பணியிடங்கள், தட்டச்சர் பதவியில் 2,108 காலிப் பணியிடங்கள், ஸ்டோர் கீப்பர் பதவியில் 1 காலிப்பணியிடம், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 1,024 காலிப் பணியிடங்கள் மற்றும் வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சருக்கு 163 பணியிடங்கள் என மொத்தம் 7382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!