Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மாதம் ரூ. 5000 வரை வருமானம் தரும் சேமிப்பு திட்டம்!
சமீப காலமாக பொதுமக்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஆபத்துகள் நிறைந்த முதலீட்டுத் திட்டங்களில் சேருவதைக் காட்டிலும், பாதுகாப்பு கொண்ட அரசு திட்டத்தில் முதலீடு செய்வதையே மக்கள் விரும்புகின்றனர். அந்தச் வகையில் அஞ்சல் நிலையத்தின் எம்ஐஎஸ் அக்கவுண்டில் முதலீடு செய்வதன் மூலமாக ஒருவர் மாதந்தோறும் ரூ.5,000 வரை பணப்பலன் பெற முடியும்.
சேமிப்பு திட்டம்:
எம்ஐஎஸ் திட்டத்தில் பணிக்கு செல்லும் கணவன் – மனைவி, கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் சேர்ந்து பணத்தை சேமித்து வருகின்றனர். இந்த திட்டம் நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிக சலுகைகளும் கிடைக்கின்றன. எம்ஐஎஸ் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தனிநபர் அக்கவுண்ட் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் திறந்து கொள்ளலாம். தனிநபர் அக்கவுண்ட் கீழ் நீங்கள் ரூ.4.5 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட் வாயிலாக ரூ.9 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். அதே சமயம், தனிநபர்கள் இருவர் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறந்து தலா ரூ.4.5 லட்சம் என்ற பங்கு அடிப்படையில் முதலீடு செய்ய முடியும்.
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அஞ்சல் நிலையத்தில் எம்ஐஎஸ் அக்கவுண்ட் திறக்க வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக நபரின் பெயரில் சேமிப்பு அக்கவுண்ட் இருக்க வேண்டும். அத்துடன் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவில் ஃபோட்டோ, முகவரி சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்யலாம். அதற்கு மேற்பட்டு 1,000 பெருக்கலில் ரூ.4.5 லட்சம் வரை தனிநபர் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கூட இந்த அக்கவுண்ட் திறக்கப்படுகிறது. ஆனால், 18 வயது நிரம்பிய பிறகே அவர்கள் பணப்பலன்களை பெற முடியும். அதன்பின் வைப்புத்தொகை ரூ.1,000 மடங்குகளில் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் கீழ் கூட்டுக் கணக்கில் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் நபர் பெறும் மொத்த வட்டி 6.6 சதவீதமாக ரூ.59,400 ஆக இருக்கும். அதை 12 ஆல் வகுக்க வேண்டும் என்றால், அதாவது ஒரு வருடத்தில் உள்ள மாதங்களின் எண்ணிக்கை, கணக்கீடுகளின்படி தபால் அலுவலக MIS மூலம் உங்கள் மாத வருமானம் ரூ.4,950 ஆக இருக்கும். கூட்டுக் கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும். தனி கணக்குகளுக்கு, வைப்புத்தொகை பாதியாகக் குறைவதால், வட்டி மாதத்திற்கு ரூ.2,475 ஆக இருக்கும். போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 6.6% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.