TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் அரசு ஆசிரியர் பணியிடத்திற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு தற்போது நடைபெற இருப்பதால் இத்தேர்வுக்கு எப்படி தயாராகலாம் என்று பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு 2 தாள்களாக நடைபெறும். இதன் முதல் தாள் எழுதுவதற்கு 12ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பை பயின்றவராக இருக்க வேண்டும். இதன் 2 ம் தாள் எழுத இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி அல்லது ஆசிரியர் பயிற்சியில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் 150 மதிப்பெண்களுக்கு 150 வினாக்கள் கேட்கப்படுகிறது.

பாடத்திட்டம்:

தாள் 1 

தாள் 2 

தேர்வுக்கு தயாராவது எப்படி?

1. முதலில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத உள்ளவர்கள் நீங்கள் தேர்ந்தெடுத்த பாடங்களையும் படிக்க வேண்டும்.

2. இதையடுத்து உளவியல் பாடங்களை புரிந்து படித்துக் கொள்ள வேண்டும். இதில் குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு, குழந்தை மேம்பாட்டின் 5 தியரிகள், ஆளுமை, ஊக்கப்படுத்தல் மற்றும் கற்பித்தல் உள்ளிட்ட பாடங்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும்.

3. அடுத்ததாக தமிழில் செய்யுள், உரைநடை, இலக்கணம் என அனைத்து பிரிவுகளையும் தொடர்ச்சியாக படித்துக்கொள்ளுங்கள். இதற்கு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான புத்தகங்களை படிக்க வேண்டும். இதில் இலக்கணப் பகுதியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.

4. இதனை தொடர்ந்து ஆங்கிலத்தில் பெரும்பாலும் இலக்கணம் சார்ந்த வினாக்கள் கேட்கப்படுவதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.

5. கணித பகுதிக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை நன்றாக படித்தால் போதும். தினமும் கணித பாடத்திட்டத்தில் தலைப்பின் கீழ் உள்ளவற்றை பயிற்சி செய்து உங்களை தயார்ப்படுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

6. அறிவியல் பகுதிக்கும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். இதில் சுற்றுச்சூழல், உயிரினங்கள், குடும்பம், உணவு, ஆரோக்கியம், விவசாயம் மற்றும் மண், நீர், ஒலி, ஒளி, வெப்பம், அளவீடு, இயக்கம், ஆற்றல் மூலங்கள் உள்ளிட்ட பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து கொள்ள வேண்டும்.

7. சமூக அறிவியல் பகுதிக்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளி புத்தகங்களை படிக்க வேண்டும். அதன்பின்னர் நேரம் இருந்தால் 11,12ம் வகுப்பு பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். இதில் வரலாறு, இந்திய தேசிய இயக்கம், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.

இவ்வாறு படித்தால் நீங்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!