Post Office அதிக பணத்தை அள்ளி தரும் RD திட்டம் – மாதம் ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் ரிட்டன்ஸ்!

0
Post Office அதிக பணத்தை அள்ளி தரும் RD திட்டம் - மாதம் ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் ரிட்டன்ஸ்!
Post Office அதிக பணத்தை அள்ளி தரும் RD திட்டம் – மாதம் ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் ரிட்டன்ஸ்!

மிகக் குறைந்த முதலீட்டில் அதிகமான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டமாக போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்புத் (RD) திட்டம் உள்ளது. இந்த திட்டம் மூலம் நீங்கள் சேமிக்கும் பணம் மற்றும் நீங்கள் பெறும் வட்டி ஆகிய இரண்டுமே மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

தொடர் வைப்புத் (RD) திட்டம்:

பொதுமக்கள் கொரோனா முழு ஊரடங்கிலிருந்து தற்போது தான் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அப்போது தான் சேமிப்பின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்தனர். இதன் அடிப்படையில் மக்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஏனென்றால் அஞ்சலகங்கங்கள் வழங்கும் சேமிப்பு திட்டங்கள் மிகவும் நம்பகமானவையாகவும், பாதுகாப்பானவை ஆகவும் இருக்கிறது என்பதை நம்புகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் தபால் அலுவலக திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ‘சின்ன முதலீடு பெரிய லாபம்’ என்ற நோக்கத்துடன் சிறிய முதலீட்டில் கூட அபாயமில்லாத பெரிய லாபத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கு, தபால் அலுவலகம் தொடர் வைப்புத் (RD) திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். குறிப்பாக, இந்த திட்டத்தில் மாதம் ரூ.10000 முதலீட்டில், 10 ஆண்டுகளில், ரூ.16 லட்சம் வருமானம் ஈட்டலாம். மேலும் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

இதையடுத்து இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், ஒருவர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு திட்ட கணக்கை தொடங்க வேண்டும். மேலும் இந்த திட்டத்திற்கு 5.80 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு, கூட்டு வட்டியுடன் சேர்த்து காலாண்டு முடிவில் கணக்கில் சேர்க்கப்படும்.

RD-யின் முக்கிய அம்சங்கள்:
  • இத்திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள், தவணைத் தொகையை சரியான நேரத்தில் டெபாசிட் செய்ய முடியாமல் போனால் அபராதம் விதிக்கப்படும்.
  • தொடர்ந்து நான்கு மாதத் தவணைகளைத் தவறவிட்டால், கணக்கு தானாகவே மூடப்படும். இருப்பினும், முடக்கப்பட்ட RD கணக்கை அதன் பயனாளர் இரண்டு மாதத்திற்குள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

மின்சார பற்றாக்குறையால் செல்போன் & இணையதள சேவை துண்டிப்பு? அரசு தகவல்!

  • ஆனால் இந்த வாய்ப்பையும் நீங்கள் தவறவிட்டால் கணக்கு நிரந்தரமாக மூடப்படும்.
  • இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து ஓராண்டிற்கு பிறகு, வைப்புத்தொகையில் இருந்து 50% தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!