Post Office ல் மாதம் ரூ.2500 வரை பணத்தை அள்ளி தரும் திட்டம் – முழு விவரம் இதோ!

0
அஞ்சலக மாதாந்திர வருவாய் (MIS) திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் மாதம் மாதம் வருமானம் பெற முடியும். இதனால் இது வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

MIS திட்டம்:

போஸ்ட் ஆஃபிஸில் தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டம் (MIS) செயல்பாட்டில் உள்ளது. ஆபத்துகள் நிறைந்த முதலீட்டுத் திட்டங்களில் சேருவதைக் காட்டிலும், பாதுகாப்பு கொண்ட அரசு திட்டத்தில் முதலீடு செய்வதையே மக்கள் விரும்புகின்றனர். இதன் அடிப்படையில் எம்ஐஎஸ் அக்கவுண்டில் முதலீடு செய்வதன் மூலமாக ஒருவர் மாதந்தோறும் ரூ 2500 வரை பணப்பலன் பெற முடியும். மேலும் அஞ்சல் நிலையத்தில் எம்ஐஎஸ் அக்கவுண்ட் திறக்க வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக உங்கள் பெயரில் சேமிப்பு அக்கவுண்ட் இருக்க வேண்டும். இத்துடன் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ, முகவரி சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்யலாம். அதற்கு மேல் ரூ.4.5 லட்சம் வரை தனிநபர் முதலீடு செய்யலாம். இதையடுத்து 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கூட இந்த அக்கவுண்ட் திறக்கப்படுகிறது. ஆனால், 18 வயது நிரம்பிய பிறகே அவர்கள் பணப்பலன்களை பெற முடியும். இந்த திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% என்ற விகிதத்தில் உள்ளது. இதில் கூட்டு வட்டி கிடையாது. சிம்பிள் வட்டி தான். இந்த திட்டத்தை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்க ஆரம்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிகளுக்கு இனி வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை – புதிய அறிவிப்பு வெளியீடு

மேலும் எம்ஐஎஸ் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தனிநபர் அக்கவுண்ட் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் திறந்து கொள்ளலாம்.அதாவது தனிநபர் அக்கவுண்ட் கீழ் ரூ.4.5 லட்சம் வரையிலும் மற்றும் ஜாயிண்ட் அக்கவுண்ட் வாயிலாக ரூ.9 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.4,950 சம்பாதிக்கலாம். இதுவே தனிக் கணக்கு என்றால் மாதம் ரூ.2,475 பெறலாம். அதே சமயம், தனிநபர்கள் இருவர் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறந்து தலா ரூ.4.5 லட்சம் என்ற பங்கு அடிப்படையில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!