சன் டிவி ‘பூவே உனக்காக’ சீரியலில் வரவிருக்கும் வெள்ளித்திரை நடிகை – ஆர்வத்தில் ரசிகர்கள்!

0
சன் டிவி 'பூவே உனக்காக' சீரியலில் வரவிருக்கும் வெள்ளித்திரை நடிகை - ஆர்வத்தில் ரசிகர்கள்!
சன் டிவி 'பூவே உனக்காக' சீரியலில் வரவிருக்கும் வெள்ளித்திரை நடிகை - ஆர்வத்தில் ரசிகர்கள்!
சன் டிவி ‘பூவே உனக்காக’ சீரியலில் வரவிருக்கும் வெள்ளித்திரை நடிகை – ஆர்வத்தில் ரசிகர்கள்!

சன் டிவியில் தோழிகளின் அன்பை எடுத்துக்காட்டும் வகையில் பூவே உனக்காக சீரியல் தொடங்கப்பட்டது. பல திருப்பங்களுடன் செல்லும் இத் தொடரில் கீர்த்தியாக நடித்தவர் சீரியலை விட்டு விலகியதை தொடர்ந்து கதிர், பூவரசி கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் விலகினார்கள். இந்நிலையில் புதிய திருப்பமாக சிறப்பு தோற்றத்தில் நடிக்க வருகிறார் வெள்ளித்திரை நடிகைஒருவர்.

வரவிருக்கும் புது நடிகை:

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் மோஸ்ட் தொலைக்காட்சியாக விளங்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பூவே உனக்காக. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகியது. இதில் பூவரசியாக ராதிகா ப்ரீத்தி மற்றும் கீர்த்தியாக ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ் அவர்களும் இணைபிரியாத தோழர்களாக இருந்தனர். அதில் கீர்த்தி விரும்பிய காதலன் தன் தோழி பூவரசி கனவில் எதார்த்தமாக தோன்ற அவள் மனதிலும் அந்த அறியாத நபர் மீது கனவிலே காதல் கொண்டு வந்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் குமரன் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கயல் நடிகையுடன் புது வெப் சீரிஸ்!

சூழ்நிலை பூவரசியையும் கீர்த்தியின் காதலனான கதிரையும் சேர்க்கிறது. இந்த நிலையில் விரும்பிய காதலனா ? உயிர் தோழி பூவரசியின் வாழ்க்கையா? என்ற கேள்வியின் மத்தியில் உயிர் தோழியின் ஆசை கனவை நிறைவேற்றும் வகையில் தன காதலை விட்டு கொடுத்தார். பிறகு கீர்த்தியின் ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ் அவரது உயர் படிப்புக்காக சீரியலை விட்டு விலகினார். அதை தொடர்ந்து கதிராக நடித்த அருண் அவர்களும் விலகினார்.

ராதிகாவிடம் உடம்பு சரியில்லாமல் நடிக்கும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த எபிசோட்!

மேலும், அடுத்தடுத்து ரசிகர்கள் இடையில் போர் அடிக்கும் வகையில் ஜவ்வாக தொடர் நகர்ந்ததை தொடர்ந்து பூவரசியும் சமீபத்தில் சீரியலை விட்டு விலகினார். தற்போது ‘தூங்கி கிடந்த சிங்கத்தை சீண்டுவது போல’ சீரியலில் புது திருப்பமாக தமிழ் சினிமா நடிகை அதாவது 7G ரெயின்போ காலனி படத்தில் அனிதாவாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சோனியா அகர்வால் ஓர் சிறந்த தோற்றத்தில் வரவுள்ளதாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களிடையே புத்துணர்ச்சி உண்டாகி ஆவலை தூண்டியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!