ராதிகாவிடம் உடம்பு சரியில்லாமல் நடிக்கும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி மீது பாக்கியா சந்தேகத்துடன் இருக்க அதை சமாளிக்க கோபி நடிப்பை போடுகிறார். ஆனால் அதனால் ராதிகாவிடம் சிக்கிக் கொள்ள அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வரப் போகிறது. கோபி இதுவரை ராதிகாவுடன் பழகி வந்துள்ள நிலையில், இனி அவர் ராதிகாவை திருமணம் செய்ய போகிறார். அதனால் பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். பாக்கியாவின் அறியாமையை பயன்படுத்தி அவர் விவாகரத்து வாங்கிவிட்டார். இந்நிலையில் கோபி விவாகரத்து வாங்கியதால் ராதிகா கோபி மீது கூடுதல் அக்கறையுடன் இருக்கிறார். அவருக்கு விதவிதமாக சமைத்து கொடுப்பது முதல் பல வேலைகளை செய்கிறார்.
“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய KPY சதீஸ் – ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் கோபி ராதிகா வீட்டில் இருந்த சமயம் பாக்கியா வர கோபி மறைந்து கொள்கிறார். அதனால் ராதிகாவுக்கு சந்தேகம் வந்தாலும் கோபி அதை சமாளித்துவிடுகிறார். மறுபக்கம் பாக்கியா ராதிகா வீட்டின் வாசலில் கோபியின் காரை பார்க்க அதை எல்லாம் கோபி பொய் சொல்லி சமாளிக்கிறார். அது பற்றி பாக்கியா கண்டுபிடிக்க இன்று உடம்பு சரியில்லை என நடிக்கிறார். அதனால் பாக்கியா தன்னுடைய வேலையை விட்டுவிட்டு கோபியை கவனித்துக் கொள்கிறார்.
அப்போது கோபியை ரெஸ்ட் எடுக்க சொல்ல, அந்த நேரம் ராதிகா போன் செய்கிறார். அப்போது கோபி எனக்கு உடம்பு சரியில்லை என சொல்ல, ராதிகா வீடியோ காலில் வர சொல்கிறார். உடனே கோபி முடியாதது போல நடிக்க, வீடியோ காலில் முடியாமல் பேசுகிறார். என்னை பார்த்துக் கொள்ள யாருமே இல்லை வீட்டில் யாரும் இல்லை என சொல்ல, அப்போது ராதிகா நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்க கிளம்பி இங்கே வாருங்கள் என சொல்கிறார்.