‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் குமரன் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கயல் நடிகையுடன் புது வெப் சீரிஸ்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் கதிர் முல்லை கதாபாத்திரத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் குமரன் சீரியலில் நடிப்பதை தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிக்கும் படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
குமரன் நடிக்கும் படத்தின் அப்டேட் :
விஜய் டிவி சீரியல்களில் படு சூடாக போய்க் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் 4 அண்ணன் தம்பிகளில் ஒரு தம்பியாக குமரன், கதிர் கதாபாத்திரத்திலும் அவருக்கு ஜோடியாக முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். ஆரம்ப கட்டத்தில் ஒளிபரப்பாகிய கதிர் முல்லை கெமிஸ்ட்ரி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டது. அவர்களது ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே சீரியலை பார்க்கும் ரசிகர் பட்டாளங்களும் இருந்தது.
விஜய் டிவி ” ராஜா ராணி 2″ சீரியல் சித்து தனது மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் வீடியோ!
மேலும், விஜே சித்ரா இருந்தவரை கதிர் முல்லை கதாபாத்திரம் டாப்பில் இருந்தது. ஆனால் அவரது மறைவுக்கு பின் அவருக்கு பதிலாக முல்லை இடத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். அவரை ஆரம்பத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தற்போது அவர் நடிப்பை ஆதரித்து வருகிறார்கள். மேலும் கதிராகிய குமரன் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவரது மனைவி சுஹாசினியுடன் கலந்து கொண்டு வருகிறார்.
அதில் ஒன்றாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சீசன் 2 விலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். குமரன் அவர்கள் சீரியலில் நடிப்பதை தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார் என்று சொல்லப் பட்டு வந்த நிலையில் அதை குறித்து விரிவான தகவல்கள் ஏதும் வெளியே வராமல் இருந்தது. ஆனால் தற்போது அவர் நடிக்க இருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் அவருடன் கயல் நடிகை சைத்ராவும் இணைய உள்ளது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் பூஜை புகைப்படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது.