விஜய் டிவி ” ராஜா ராணி 2″ சீரியல் சித்து தனது மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ” ராஜா ராணி 2″ சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்து தனது காதல் மனைவி ஸ்ரேயா பிறந்தநாள் அன்று பரிசாக கார் ஒன்றை பரிசளித்து இருக்கிறார். மேலும் கார் வாங்கிய சந்தோசத்தை ஹோட்டலில் கொண்டாடி இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சித்து- ஸ்ரேயா ஜோடி:
சீரியல்களில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பலர் இருக்கின்றனர். அவர்களில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் சித்து ஸ்ரேயா ஜோடி. இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற சீரியலில் ஒன்றாக நடித்து பின் காதலித்து வந்தனர். இந்த அழகான ஜோடிக்கு திருமணத்திற்கு முன்பே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அந்த சீரியல் முடிந்த பின் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் சித்து ஆல்யா மானசா உடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
ராதிகாவிடம் உடம்பு சரியில்லாமல் நடிக்கும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த எபிசோட்!
மேலும் ஸ்ரேயாவும் ஜீ தமிழில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் திருமணம் முடிந்த கையோடு புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். சித்து தனது காதல் மனைவியின் பிறந்தநாளில் அந்த காரை பரிசளித்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் தற்போது விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா விலக இருப்பதால் அவருக்கு பதிலாக சித்துவின் மனைவி ஸ்ரேயா தான் அடுத்த சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் சித்து புது கார் வாங்கியதற்கு தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். மேலும் காருக்கு பூஜை போட்டு தனது சந்தோசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அடுத்ததாக ஸ்ரேயாவை ஹோட்டலிற்கு அழைத்து சென்று பிடித்தது எல்லாம் வாங்கி இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை தனது யூடுயூப் சேனலில் அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி இருக்கிறது.