தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பை 2022 – திடீர் மாற்றம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பை 2022 - திடீர் மாற்றம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பை 2022 - திடீர் மாற்றம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பை 2022 – திடீர் மாற்றம்!

தமிழகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களை தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க உள்ளது. தற்போது வழங்க இருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு பை

தமிழகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு பொருள் தொகுப்பை வருகிற ஜனவரி 3ம் தேதி இருந்து வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு போன்ற 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது

Post Office இல் மாதம் ரூ.1500 சேமித்தால் ரூ.30 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!

இந்த ஆண்டுக்கான 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்படாமல் மஞ்சப்பைகளில் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த மஞ்ச பையில் தமிழக அரசு முத்திரையுடன் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள் என அச்சடிக்கப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் தமிழக அரசு தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

Reliance Jio பயனாளர்களுக்கு புத்தாண்டு பரிசு – ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிப்பு!

அதனால் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள் என இடம்பெற்றிருந்த இடத்தில் இப்போது “தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்” என மாற்றம் செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தற்போது புதியதாக மாற்றம் செய்யப்பட்ட பையில் இருபுறமும் தமிழக அரசு முத்திரை அச்சடிக்கப்பட்டிருந்தது. மேலும் பையின் ஒருபுறம் உழவர்கள் மாடுகளுடன் பொங்கல் கொண்டாடுவதை குறிக்கும் படமும் அதன் மறுபுறத்தில் ‘தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்’ என்ற வாசகமும் ‛மண் செழிக்கட்டும்!, மக்கள் மகிழட்டும்!, வீடு நிறையட்டும்!, நாடு சிறக்கட்டும்!’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!