PM KISAN திட்ட பயனர்களுக்கு எழுந்த சிக்கல் – 18,000 பேருக்கு உதவித்தொகை கிடையாது.. காரணம் இதுதான்!
இந்தியாவில் மத்திய அரசின் கிசான் திட்ட பயனாளர்கள் அவ்வப்போது பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தபட்டுள்ளது. தற்போது பதிவை புதுப்பிக்காத பயனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கிசான் திட்டம்:
மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு நிதியாண்டில் ரூ. 2000 வீதம் 3 தவணைகளாக ரூ. 6000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அடுத்தாக 14வது தவணைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் கிசான் திட்ட பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
தற்போதைய ஆய்வில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 10,300 விவசாயிகள் ஆதார் எண்ணை சரி பார்க்காமல் உள்ளனர். மேலும் 8000 பேர் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- சம்பளம்!
மேலும் சிலர் தங்களது கிசான் திட்ட பயனர்கள் பதிவை புதுப்பிக்காமலும் உள்ளனர். இதனால் 18,000 விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால் விவசாயிகள் விரைந்து ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.