IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – இன்றைய ஆட்டத்திற்கான உத்தேச XI அணி விவரம்!

0
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - இன்றைய ஆட்டத்திற்கான உத்தேச XI அணி விவரம்!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - இன்றைய ஆட்டத்திற்கான உத்தேச XI அணி விவரம்!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – இன்றைய ஆட்டத்திற்கான உத்தேச XI அணி விவரம்!

ஐபிஎல் 2022 போட்டியில் கேகேஆருக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தோல்வியுற்ற CSK, லக்னோ அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் பிளேயிங் XI அணியின் பந்துவீச்சுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

பலத்த எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்த IPL 2022 போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவி இருந்தது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியுற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த ஆண்டிற்கான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று பழி தீர்த்து கொண்டது. இப்போது IPL போட்டியின் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய CSK அணி அடுத்த ஆட்டத்திற்கான XI அணியில் மாற்றங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டை இணைக்க கடைசி நாள் நீட்டிப்பு!

அந்த வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் ரவீந்திர ஜடேஜா, முதல் போட்டியில் சறுக்கலை சந்தித்த பேட்டிங் பிரிவை சீரமைப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதே போல அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதல் ஐபிஎல் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ய போராடும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கவனத்தில் கொண்டு சிஎஸ்கே எந்த மாதிரியான பிளேயிங் லெவனை களமிறக்க வாய்ப்புள்ளது என்ற விவரங்களை இப்போது காணலாம்.

ருதுராஜ் கெய்க்வாட்:

கடந்த ஆண்டு ஆரஞ்சு தொப்பி வென்ற கெய்க்வாட் காயம் காரணமாக போட்டிகளை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார். அவர் கடந்த ஆட்டத்தில் நான்கு பந்துகளில் டக் ஆக ஆட்டமிழந்தார். அதனால், 25 வயதான நம்பிக்கைக்குரிய பேட்டரிடமிருந்து ஒரு உற்சாகமான மறுபிரவேசத்தை இன்றைய போட்டியில் எதிர்பார்க்கலாம்.

டெவோன் கான்வே:

தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட நியூசிலாந்து பேட்டர் டெவோன் கான்வே கடந்த ஆட்டத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் அவர் இந்த சீசனில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராபின் உத்தப்பா:

36 வயதான ராபின் உத்தப்பா கடந்த ஆட்டத்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஸ்டம்ப்டில் ஆட்டமிழந்தார். உத்தப்பாவுக்கு இந்த சீசனில் பல வாய்ப்புகள் காத்திருக்கிறது.

அம்பதி ராயுடு:

உத்தப்பாவைப் போலவே ராயுடுவும் விரைந்து சில ரன்களை எடுக்க ஆர்வமாக இருப்பார். அனுபவம் வாய்ந்த இவர் கடந்த 2018 போன்ற சீசனை போல இந்த சீசனிலும் ஒரு மகத்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ரவீந்திர ஜடேஜா (கேப்டன்):

ஜடேஜாவின் ஸ்டிரைக் ரேட் கடந்த ஆட்டத்தில் 92 என சற்று கவலை அளிப்பதாக இருந்தது. ஆனால் அவர் பேட்டிங் செய்ய வந்த சூழ்நிலையைப் பார்த்தால் அது புரிந்துகொள்ளத்தக்கது தான். டாப் ஆர்டரில் இன்னும் கொஞ்சம் ஆதரவு கிடைத்தால் ஜடேஜாவின் வான வேடிக்கையை பார்க்கலாம்.

எம்எஸ் தோனி (WK):

முதல் போட்டியில் MS தோனியின் விண்டேஜ் நாக் சிறப்பாக இருந்தது. அந்த வகையில், 38 பந்துகளில் 50 ரன்களுக்கு 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை அடித்து மீண்டும் ஃபார்முக்கு வந்த தோனியை அந்த ஆட்டத்தில் பார்க்க முடிந்தது.

ஷிவம் துபே:

தோனி அதிகமாக பேட்டிங் செய்தால், துபே ஃபினிஷர் பாத்திரத்தை ஏற்கலாம். KKR அணிக்கு எதிராக, துபே 6 ரன்களில் 3 ரன்கள் எடுத்தார்.

டுவைன் பிராவோ:

மூத்த வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆன டுவைன் பிராவோவுக்கு முந்தைய ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், சில பட்டாசு பேட்டிங் மற்றும் சில ஸ்மார்ட் ஸ்லோயர் பந்துகளை எதிர்பார்க்கலாம்.

மிட்செல் சான்ட்னர்:

நியூசிலாந்தை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் கடந்த ஆட்டத்தில் பந்துவீசி ஒரு விக்கெட்டை எடுத்தார். மேலும் அவரது பொருளாதார விகிதமும் ஆபத்தானதாக இல்லை.

ஆடம் மில்னே:

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் இந்த ஆட்டத்தில் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கலாம்.

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்:

கடந்த ஆட்டத்தில் மூன்று ஓவர்களில் 23 ரன்களை விட்டுக்கொடுத்த துஷார் தேஷ்பாண்டேவிற்கு பதிலாக U-19 நட்சத்திரம் ஹங்கர்கேகரை பிளேயிங் XIல் களமிறக்கலாம்.

உத்தேச லெவன் அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி (WK), சிவம் துபே, டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!