அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!

0
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி நிவாரணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் தொகை உயரும் என்பதற்கான முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

பென்ஷன் தொகை:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு, பென்ஷன் உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மத்திய அரசு ஊழியர்களில் சில பிரிவினருக்கு மட்டும் அகவிலைபடி சம்பள உயர்வு வழங்கவுள்ளதாக மத்திய பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, 1960 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி முதல் 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை வேலையில் இருந்து ஓய்வுபெற்ற CPF பயனாளிகளுக்கு அகவிலை நிவாரணம் கடந்த ஜனவரி 1 அன்று 368 சதவீதத்தில் இருந்து 381 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – மாதந்தோறும் குறைகேட்பு முகாம்!

இந்த CPF பயனாளிகளுக்கு எந்த முறையில் அடிப்படை நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். A பிரிவினருக்கு 3000 ரூபாயும், B பிரிவினருக்கு 1000 ரூபாயும், C பிரிவினருக்கு 750 ரூபாயும், D பிரிவினருக்கு 650 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்காணும் சிபிஎஃப் பயனாளிகளுக்கு 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலை நிவாரணம் 360 விழுக்காட்டில் இருந்து 373 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், 1986 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னால் பணியில் இருந்த CPF பயனாளிகள் இறந்துவிட்டால் இறந்தவரின் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் பென்சன் தொகையை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1960 நவம்பர் 18ஆம் தேதிக்கு முன் CPF பயனாளிகள் பணி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணத் தொகை 654 ரூபாய், 659 ரூபாய், 703 ரூபாய் மற்றும் 965 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. எந்தெந்த ஊழியருக்கு எவ்வளவு பென்சன் கொடுக்க வேண்டும் என்பதை பென்சன் விநியோகிக்கும் நிறுவனங்கள் தான் தீர்மானிக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!