தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – மாதந்தோறும் குறைகேட்பு முகாம்!

0
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - மாதந்தோறும் குறைகேட்பு முகாம்!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - மாதந்தோறும் குறைகேட்பு முகாம்!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – மாதந்தோறும் குறைகேட்பு முகாம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கார்டில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள மாதந்தோறும் ரேஷன் குறைகேட்பு முகாம் நடைபெற்று வந்தது. கொரோனா காரணமாக இதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த அரசு தற்போது இம்முகாமை நடத்த அனுமதி அளித்துள்ளது.

குறைகேட்பு முகாம்

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அரசின் நலத்திட்டங்கள் கூட ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். மேலும் இதில் தங்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் புதிதாக திருமணமானவராக இருந்தாலோ அல்லது தங்களின் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கப்பட்டலோ அவர்களின் பெயர்களும் ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை திட்டம் – ஜூலை 15 முதல் அமல்!

இப்போது ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள ‘இ-சேவை’ மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்கு முன்பாக பொது வினியோகத் திட்டத்தில் உள்ள குறைகளை தீர்ப்பதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் மாதாந்திர குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த குறைகேட்பு முகாம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து அனைத்து விதமான கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி தற்போது பொது வினியோக திட்டத்தில் உள்ள குறைகளை தீர்க்க ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை தாலுகா அளவிலான குறைகேட்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் குடிமைப்பொருள் தனி தாசில்தார் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் ரேஷன் கார்டில் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றால் இந்த குறைகேட்பு முகாம் மூலமாக சுலபமாக மேற்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!