“பப்பு ஐலா என்ன அடிச்சிட்டா” செல்லமாக கொஞ்சும் ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!
சீரியல்களில் நடிக்கும் சில ஜோடிகள் நிஜ வாழ்வில் இணைவது ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெறுகிறது. அந்த வகையில் ராஜா ராணி சீரியாலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஆல்யா மானசா, தற்போது தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர்களது யூடியூபில் ஒரு வீடியோ ஓன்று வெளியானது. அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ:
டான்சராக வலம் வந்த ஆல்யா மானசா, ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.மேலும் சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்பு மீண்டும் சின்னத்திரையில் ராஜா ராணி 2 மூலம் ஆல்யா ரீ என்ட்ரி கொடுத்தார். 1 வருடம் தொடர்ந்து பிசியாக நடித்து வந்தார். அதற்குள் இரண்டாவது குழந்தை பிறக்க போகுது என்று சொல்லி சீரியலை விட்டு விலகிவிட்டார். மேலும் ஆல்யாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
சின்னத்திரையின் டாப் ஜோடிகளான ஆல்யா – சஞ்சீவ் யூடியூப்பில் வேற லெவலில் கலக்கி கொண்டிருக்கின்றனர். சீரியல்கள் மூலம் இவர்களுக்கு கிடைத்த ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், டிஜிட்டல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து உள்ளனர். அதற்கு காரணம் யூடியூப்பில் இவர்கள் வெளியிடும் வீடியோக்கள். ஆனால் அவரின் யூடியூப் சேனலில் அவரை ரசிகர்கள் தொடர்ந்து பார்க்கலாம்.அதே போல் சஞ்சீவ் கயல் சீரியலில் தொடர்ந்து பிசியாக நடித்து வந்தாலும் தவறாமல் யூடியூபில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கோபி வெளியிட்ட பதிவு!
அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது மகன் அர்ஷ் முகத்தை முதன்முறையாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். ஆல்யா – சஞ்சீவ் யூடியூப் சேனலில் அர்ஷ் என்ட்ரி கொடுக்கும் முதல் தருணத்தை அப்படியே வீடியோவாக மாற்றி அதை யூடியூப்பில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று ஒரு VLOG வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அது குடும்பத்தோடு ஷாப்பிங் சென்று உள்ள வீடியோ ஆகும். அதில், சஞ்சீவ் அம்மா அர்ஷ் பாப்பா க்கு ஒரு Baby Stroller Pram வாங்கிக் கொடுத்திருப்பார். மேலும் ஐலா பாப்பா, அவரது அம்மாவை செல்லமாக அடித்து விளையாடினார். அப்போது ஆலியா ” பப்பு ஐலா என்ன அடிச்சிட்டா என செல்லமாக அழுவது” பார்க்கவே காமெடியாக இருந்தது.