ஜீவாவை குடிக்க வைத்ததால் கைலாஷை அடித்த மூர்த்தி, கோவிலுக்கு செல்ல முடிவு செய்த முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இன்றைய எபிசோட்!

0
ஜீவாவை குடிக்க வைத்ததால் கைலாஷை அடித்த மூர்த்தி, கோவிலுக்கு செல்ல முடிவு செய்த முல்லை -
ஜீவாவை குடிக்க வைத்ததால் கைலாஷை அடித்த மூர்த்தி, கோவிலுக்கு செல்ல முடிவு செய்த முல்லை - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" இன்றைய எபிசோட்!
ஜீவாவை குடிக்க வைத்ததால் கைலாஷை அடித்த மூர்த்தி, கோவிலுக்கு செல்ல முடிவு செய்த முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி ஜீவா குடித்ததை நினைத்து கோவமாக இருக்க கைலாஷை அழைத்து அடித்து நொறுக்குகிறார். பின் முல்லை கஸ்தூரி உடன் இணைந்து கோவிலுக்கு செல்ல முடிவு செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதிரிடம் சொல்லி கடைக்கு கைலாஷை அழைத்து வர சொல்கிறார். அப்போது கதிர் அண்ணன் கூப்பிட்டதாக சொல்ல, எதற்காக என்னை கூப்பிட்டார் என கேட்கிறார். எதோ விருந்து கொடுக்க இருப்பதாக சொல்ல, விருந்து கொடுக்க வீட்டிற்கு வராமல் கடைக்கு வர சொல்லிருக்கார் தண்ணீ அடிக்க தான வர சொன்னீங்க என கைலாஷ் கேட்க, கதிர் ஆமாம் என சொல்கிறார். ஜீவாவை குடிக்க வைத்தது நீ தான என மூர்த்தி கேட்க ஆமாம் அந்த பாட்டில் தான் வேணுமா அருமையாக இருக்கும் அதனால் தான் ஜீவா மாமா வேண்டும் வேண்டும் என கேட்டு வாங்கி குடித்தார் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் என் காரில் இன்னும் ஐந்து பாட்டில் இருப்பதாக சொல்கிறார். அப்போது மூர்த்தி பின்னாடி வா என சொல்ல கைலாஷ் தனியாக போகிறார். பின் மூர்த்தி கைலாஷை அடித்து நொறுக்குகிறார். பின் கைலாஷ் வெளிய வர இனிமேல் ஜீவாவை குடிக்க வைக்க கூடாது என சொல்கிறார். மறுபக்கம் முல்லை வீட்டின் பின்புறம் காத்துக் கொண்டிருக்க கஸ்தூரி வருகிறார். என்ன முல்லை தனியாக பேச வேண்டும் என கூப்பிட்டாய் என கேட்க, நீங்க அன்னைக்கு ஒரு கோவில் சொன்னீங்க அதற்கு போகலாமா என கேட்கிறார். நீ தான் கஷ்டமாக இருக்கும் என சொன்னாய் என சொல்ல, போகலாம் என முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்.

எப்போது போக வேண்டும் என கேட்க வெள்ளி செவ்வாய் போகலாம் என கஸ்தூரி சொல்கிறார். நாளைக்கு வெள்ளிக் கிழமை தான் போகலாம் என சொல்கிறார். எதாவது கொண்டு செல்ல வேண்டுமா என கேட்க கொஞ்சம் பணம் மட்டும் எடுத்து கொண்டு வா என சொல்கிறார். பின் கயலை பற்றி கண்ணன் பேசிக் கொண்டிருக்க, முல்லை ஐஸ்வர்யாவை வைத்து கிண்டல் செய்கிறார். அப்போது மூர்த்தி வர கயலை தூக்கி கொஞ்சுகிறார். பின் ஜீவா வர மூர்த்தியிடம் நீங்க என்னை கடைக்கு வர வேண்டாம் என சொன்னதால் தான் கோவம் என சொல்கிறார். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்கிறார்.

வெண்பாவை திருமணம் செய்யமுடியாது என சொன்ன பாரதி, கண்ணம்மாவை சந்தித்த ஷர்மிளா – இன்றைய எபிசோட்!

ஜீவா ரூமிற்கு வர கயலை சீக்கிரமாக தூங்கவைத்து விடுகிறார். பின் மீனாவிடம் பாசமாக பேசுகிறார். மீனா நீயா இப்படி எல்லாம் பேசுகிறாய் என ஆச்சர்யப்பட அத்தான் என கூப்பிட சொல்கிறார். ஆனால் மீனா அப்படி கூப்பிடாமல் வெட்கப்பட இருவரும் சந்தோசமாக பேசிக் கொள்கின்றனர். மறுபக்கம் கண்ணன் படித்து கொண்டிருக்க மூர்த்தி வந்து கண்ணனை பார்த்து சந்தோஷப்படுகிறார். எல்லாம் ஐஸ்வர்யாவால் தான் நடப்பதாக சொல்கிறார். தனம் அவள் தான் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்துவிட்டு கண்ணனையும் காலை இரவு என படிக்க சொல்வதாக சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!