வெண்பாவை திருமணம் செய்யமுடியாது என சொன்ன பாரதி, கண்ணம்மாவை சந்தித்த ஷர்மிளா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி வெண்பாவிடம் உன்னை நான் காதலிக்கவில்லை என தெளிவாக சொல்லிவிடுகிறார். பின் ஷர்மிளா கண்ணம்மாவை ரோட்டில் பார்க்கிறார். அப்போது பணத்திற்கு ஆசைப்படாத பெண் போல என நினைத்து சந்தோசப்படுகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி வெண்பாவிடம் நீ என்னுடைய தோழி மட்டும் தான் என சொல்ல, வெண்பா என்னை இப்படி சொல்லி ஏமாற்ற பார்க்கிறாய் என கேட்கிறார். அப்போது வெண்பா நான் உன்னை காதலிப்பது உன் அம்மா அப்பா தம்பி கண்ணம்மா உன் மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் ஆனால் உனக்கு மட்டும் தெரியவில்லை நீ அவ்வளவு பெரிய முட்டாள் எதுவும் இல்லை முடிவு செய்யும் போது தடுமாறுகிறாய், ஆனால் என்னை ஏமாற்றாதே பாரதி என சொல்ல, பாரதி அன்னைக்கு நான் தாலி கட்ட வந்தாலும் உன்னை காதலிக்கவில்லை. என் மீது பழி போடாதே கற்பனையில் இருந்து வெளியே வா என சொல்கிறார்.
TN Job “FB
Group” Join Now
இத்தனை வருடமாக இதை பற்றி நீ என்னிடம் பேசி இருக்கியா, நீ கல்யாணம் செய்து கொள்ளாதது உன்னுடைய தனிப்பட்ட விஷயம் என சொல்கிறார். என் வாழ்க்கையில் நடப்பது எல்லாம் போதும் என சொல்ல, நீ கண்ணம்மாவை விவாகரத்து செய்வியா என கேட்கிறார். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் நான் அவளை விவாகரத்து செய்வேன் அல்லது சேர்ந்து வாழ்வேன் என சொல்ல வெண்பா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் கண்ணம்மா ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஷர்மிளா கார் வந்து கண்ணம்மா மீது இடித்துவிடுகிறது. அப்போது கண்ணம்மாவின் மாவு எல்லாம் கொட்டிவிட, ஷர்மிளா கீழே இறங்கி வருகிறார்.
அப்போது ஷர்மிளாவிடம் கண்ணம்மா சத்தம் போட உடனே பணத்தை எடுத்து கொடுக்கிறார். ஆனால் கண்ணம்மா என்னை இடித்ததற்கு பற்றி கவலை படாமல் இப்படி இருக்கீங்க என கேட்கிறார். எப்படியும் கடைசியில் பணம் தான கேட்க போறீங்க என ஷர்மிளா சொல்ல, கண்ணம்மாவிடம் பணத்தை கொடுத்துவிட்டு கிளம்புகிறார். அப்போது ஷர்மிளாவிடம் கண்ணம்மா பணத்தை திரும்பி கொடுக்கிறார். பின் ஷர்மிளா ட்ரைவரை திட்டிவிட, கண்ணம்மாவை பார்த்து பெருமைப்படுகிறார். பின் பாரதி மருத்துவமனைக்கு வேணு சௌந்தர்யா விக்ரம் வருகிறார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய கார்டு பெறுவதற்கான வழிமுறைகள்!
பாரதி மருத்துவமனையை பார்த்து சந்தோசப்படுகிறார் விக்ரம். மேலும் அங்கே ஏழைகளுக்கு பாரதி உதவி செய்வதை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் பாரதிக்கு சிறந்த மனிதநேய மருத்துவர் விருது கொடுப்பதாக போன் வருகிறது, அகில் அதை போன் செய்து வேணுவிடம் சொல்ல, செய்திகளில் அது வருவதை பார்த்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர். ஷர்மிளா வெளியே இருந்து வர சாந்தி எதாவது சாப்பிடுகிறாயா என கேட்கிறார். அப்போது வெண்பா வர ஷர்மிளா மீது மாவு இருக்கிறது. அப்போது வெண்பா என்ன நடந்தது என கேட்க, ஷர்மிளா நடந்ததை சொல்கிறார். நான் பணம் கொடுத்தேன் ஆனால் அதை வாங்கவில்லை என சொல்கிறார். பின் பாரதி என்ன சொன்னார் என கேட்க வெண்பாவிற்கு எப்படி சொல்வது என தெரியாமல் இருக்கிறார்.