அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய கார்டு பெறுவதற்கான வழிமுறைகள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - புதிய கார்டு பெறுவதற்கான வழிமுறைகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - புதிய கார்டு பெறுவதற்கான வழிமுறைகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய கார்டு பெறுவதற்கான வழிமுறைகள்!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கார்டை எதிர்பாராதவிதமாக தொலைத்து விட்டால் அதனை சுலபமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. அத்துடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. மேலும் தற்போது “ஒரே நாடு ஒரே ரேஷன்”, என்ற திட்டம் அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தின் மூலமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்றாலும் உணவு பொருட்களை சுலபமாக பெற முடிகிறது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 16ம் தேதி விடுமுறை – அரசு அறிவிப்பு!

அதனால் தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பபிப்பவர்கள எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கார்டை எதிர்பாராத விதமாக தொலைத்து விட்டீர்கள் என்றால் இதனை ஆன்லைன் முறையில் சுலபமாக விண்ணப்பித்து பெற முடிகிறது. இதனை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் தங்களின் மொபைலை பயன்படுத்தி சில நிமிடங்களில் செய்ய முடிகிறது. இதற்கு முதலாவதாக https://www.tnpds.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.

இதையடுத்து தற்போது புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

1. முதலாவதாக தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இப்போது தங்களின் கணக்கிற்குள் உள் நுழைய வேண்டும்.

2. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு “OTP” எண் அனுப்பப்படும். இதனை உள்ளிட்டு தங்களின் சுயவிவர பக்கத்திற்கு உள் நுழைய வேண்டும்.

3. இதில் TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப் இடம்பெற்றிருக்கும்.

4. அடுத்ததாக தங்களின் மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது PDF ஃபைலை சேமிப்பதற்கு “சேமி” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

5. இந்த PDF-ஐ பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை தங்களின் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

6. இறுதியாக அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

7. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 1800 425 5901 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!