பாக்கியாவை வர விடாமல் செய்த கோபி, எழில் ஜானு நெருக்கத்தால் பொறாமைப்படும் அமிர்தா – “பாக்கியலட்சுமி” இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவை வர விடாமல் செய்த கோபி, எழில் ஜானு நெருக்கத்தால் பொறாமைப்படும் அமிர்தா -
பாக்கியாவை வர விடாமல் செய்த கோபி, எழில் ஜானு நெருக்கத்தால் பொறாமைப்படும் அமிர்தா - "பாக்கியலட்சுமி" இன்றைய எபிசோட்!
பாக்கியாவை வர விடாமல் செய்த கோபி, எழில் ஜானு நெருக்கத்தால் பொறாமைப்படும் அமிர்தா – “பாக்கியலட்சுமி” இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பாக்கியாவை ராதிகா ஆர்டரை கொடுக்கவிடாமல் செய்கிறார். பின் ஜானு எழிலிடம் நெருக்கமாக பழகுவதை பார்த்து அமிர்தாவிற்கு பொறாமை வருகிறது. அதனால் அவர் கோவப்பட எழில் அதை பார்த்து சந்தோசப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், கோபி வீட்டிற்கு வர அங்கே ஈஸ்வரி மற்றும் ஜெனி இருக்கிறார்கள். அப்போது கோபி பாக்கியா எங்கே என கேட்க பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் ஒன்று வந்துள்ளது. ஆன்டியின் தோழி ராதிகா தான் அந்த ஆர்டரை கொடுத்திருப்பதாக சொல்கிறார். அப்போது கோபி பாக்கியா இப்படி சென்றுவிட்டா உங்களை எல்லாம் யார் பார்த்துக் கொள்வது என கேட்கிறார். அதெல்லாம் அவள் வந்துவிடுவாள் என ஈஸ்வரி சொல்ல, பாக்கியா அந்த நேரம் பார்த்து வருகிறார். அப்போது கோபி எப்படி சமாளிப்பது என தெரியாமல் இருக்க, உள்ளே வந்த பாக்கியா ராதிகா அனாதை குழந்தைகளுக்கு சாப்பாடு செய்ய சொல்லிருக்காங்க எவ்வளவு பெரிய விஷயம், அதிலும் ராதிகாவை திருமணம் செய்ய போகிறவர் அங்கே வந்திருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அவரை இன்று கண்டிப்பாக பார்க்க வேண்டும் என சொல்ல, கோபி அதெல்லாம் வேண்டாம் நான் அப்பாவை காட்ட முக்கியமான டாக்டரிடம் அப்பாய்ன்மென்ட் வாங்கி வைத்திருப்பதாக சொல்கிறார். அப்போது பாக்கியா சரி என சொல்லி கிளம்புகிறார். மறுபக்கம் எழிலிடம் ஜானு நெருக்கமாக இருக்க அமிர்தாவிற்கு அதை பார்த்து பொறாமை வருகிறது. ஜானு எதோ காமெடி வீடியோ ஒன்றை பார்க்க எழிலிடம் நன்றாக இருப்பதாக சொல்கிறார். அதை பார்த்து அமிர்தா கோவமாக இருக்க ஜாணுவிற்கு அமிர்தாவை பிடிக்காமல் இருக்கிறது. பின் எழில் அவங்க கேரக்டர் அப்படி என சொல்ல, ஜானு எழில் முகத்தை பிடித்து கிள்ளுகிறார்.

உடனே அமிர்தா கோவமாக எழுந்து செல்ல, சதீஸிடம் அவங்க செய்வது எதுவும் சரி இல்லை என கோவமாக பேசுகிறார். பின் சதீஸ் அமிர்தா நடவடிக்கையை பார்த்து காதல் இருப்பதை உறுதி செய்கிறார். எழில் வந்து அமிர்தா எங்கே என கேட்க, சதீஸ் நீ ஜானுவிடம் நெருக்கமாக இருப்பதை பார்த்து அமிர்தாவிற்கு கோவம் வருகிறது கண்டிப்பாக இது காதல் தான் என சொல்கிறார். மறுபக்கம் ராதிகா அனாதை இல்லத்தில் கோபியுடன் காத்துக் கொண்டிருக்க இன்று டீச்சரை நீங்க பார்க்க வேண்டும் என சொல்கிறார். கோபி பாக்கியா வரமாட்டார் என்ற சந்தோஷத்தில் நான் பார்க்க ரெடி என சொல்கிறார்.

ஜீவாவை குடிக்க வைத்ததால் கைலாஷை அடித்த மூர்த்தி, கோவிலுக்கு செல்ல முடிவு செய்த முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இன்றைய எபிசோட்!

அப்போது பாக்கியா பின் செய்து என்னால் வர முடியாது என சொல்கிறார். பின் செல்வி வந்து இறங்க அவரை பார்த்த கோபி கண்ணில் படாமல் தப்பித்து செல்கிறார். பின் சாப்பாடு உள்ளே கொடுக்க செல்ல, அங்கே செல்வியை வர வேண்டாம் என சொல்கிறார். கடைசி வரை செல்வி கண்ணில் படாமல் கோபி தப்பித்து விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த ராமமூர்த்தி பாக்கியா மருத்துவர் வரவில்லை என சொல்கிறார். ஈஸ்வரி இவன் ஏன் உன்னுடைய வேலையை கெடுத்தான் என கேட்கிறார். பின் ராமமூர்த்தி என்ன நடந்திருக்கும் என நினைக்க செல்வி வந்து நடந்ததை சொல்கிறார். பாக்கியா ராதிகா திருமணம் செய்ய போறவரை பார்த்தியா என கேட்க செல்வி இல்லை என சொல்கிறார். ராமமூர்த்தி கோபி திருந்தவில்லை என நினைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!