தமிழ் புத்தாண்டன்று கமகமக்கும் பால் பாயசம் செய்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா – வைரலாகும் வீடியோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவரது வீட்டில் பாயாசம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை அவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் எக்கச்சக்கமான ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியல் என்றால் அது கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். கூட்டு குடும்ப வாழ்க்கையை அப்படியே மக்களிடம் பிரதிபலிப்பதால் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரினை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த சீரியல்களை விட சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கிறார்கள்.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் தனம். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் முக்கிய அங்கமாக அதாவது கதிர், ஜீவா மற்றும் கண்ணன் ஆகியோருக்கு மூத்த அண்ணியாக நடித்துவருகிறார். இந்த சீரியலில் நடித்தது போக மீதி நேரம் முழுவதும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகிறார். அப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பார்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
அதுமட்டுமில்லாமல் கதை கேளு கதை கேளு என்னும் யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து திறம்பட நடத்தி வருகிறார். யூடியூப் பக்கத்தில் மட்டுமே ஐந்து லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை வைத்திருக்கிறார். அவ்வப்போது அவரது யூடியூப் பக்கத்தில் மக்களுக்கு தேவையான சில கருத்துகள், ஷூட்டிங்கில் இவர்கள் அடித்த அரட்டைகள் என அனைத்தையும் பதிவு செய்தபடி இருப்பார். தற்போது தமிழ் புத்தாண்டு அன்று வீட்டில் பால் பாயாசம் செய்து வீடியோ ஒன்றையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.