தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வறண்ட வானிலை குறைந்து மாநிலம் முழுவதும் குளிர்ந்த நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மையம் அறிக்கை:

லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (ஏப்.,16) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

TCS, Wipro நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ்!

16.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

17.04.2022, 18.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

19.04.2022: தென்‌ தமிழகம்‌ , மேற்கு தொடர்ச்‌சிமலை பகுதி மாவட்டங்கள்‌, ஈரோடு, தருமபுரி, சேலம்‌, நாமக்கல்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

20.04.2022: கடலோர தமிழகம்‌, மேற்கு தொடர்ச்சிமலை பகுதி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!