விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அண்ணி தனமா இது? வைரலாகும் திருமண வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் அண்ணி தனமா இது? வைரலாகும் திருமண வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் அண்ணி தனமா இது? வைரலாகும் திருமண வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அண்ணி தனமா இது? வைரலாகும் திருமண வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா சமீபத்தில் தனது திருமண நாளை கொண்டாடியுள்ள நிலையில் அவரது திருமண வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை சுஜிதா

தமிழ் திரைப்பட உலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழக மக்களின் இதயத்தில் அண்ணியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா. சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பின்னர் வாலி, தேவர் மகன், பாம்பே ஆகிய திரைப்படங்கள் மூலம் சினிமா நடிகையாக உயர்ந்தவர் சுஜிதா.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

இப்படி பிசியாக நடித்து கொண்டிருந்த சுஜிதா திரைப்பட துறையை சேர்ந்த தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர் சீரியல்கள் மூலம் மீண்டுமாக சின்னத்திரையில் மறுபிரவேசம் கொடுத்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டு வரும் ‘வதினம்மா’ ஆகிய சீரியல்களில் லீட் ரோலில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா.

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது – தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கும் கவுரவம்!

குறிப்பாக நடிகை சுஜிதாவின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் தனம் அண்ணி கதாப்பாத்திரம் தமிழ் மக்களிடம் இருந்து அவருக்கு மிகுந்த வரவேற்புகளை பெற்று தந்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சுஜிதா கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தனது திருமண நாளை கொண்டாடியிருந்தார். இவரது திருமண நாளை முன்னிட்டு திருமணத்தில் இடம்பெற்றிந்த சில காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!