விஜய் டிவி ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
முன்னணி தனியார் தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சம்பளம்:
விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக சின்னத்திரையில் நீங்கா இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். முதல், இரண்டு, மூன்று என அடுத்தடுத்து சீசன்களாக சென்று கொண்டுள்ளது. 4 சீசன்களை தொடர்ந்து 5வது சீசன் எப்போது என ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் இருந்து வந்தது. தற்போது 5வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அனைவரும் புதுமுகங்களாக இருப்பதனால் சற்று சுவாரஸ்யமும் குறைந்து காணப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது – தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கும் கவுரவம்!
அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்ட இந்த சீசனில் பாடகர், நடிகர், நாட்டுப்புற கலைஞர், மாடல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 பேர் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சில மருத்துவ காரணங்களால் முதல் வாரத்தில் திருநங்கையான நமிதா மாரிமுத்து வெளியேறியதை தொடர்ந்து நாடியா சாங் இரண்டாம் வாரத்தில் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் அபிஷேக் ராஜா வெளியேறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சில நாட்கள் முதல் இறுதி நாட்கள் வரை சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் குறித்த பதிவுகளே அதிகம் காணப்படும்.
திருமண கோலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – லைக்குகளை குவித்த ரசிகர்கள்!
அதில் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த விவரங்களும் ஒன்று. நாட்களின் கணக்கில் சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் வாரத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது யாருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
- இசைவாணி – ரூ. 1 லட்சம்
- ராஜு ஜெயமோகன் – ரூ.1.5 லட்சம்
- மதுமிதா – ரூ.2.5 லட்சம்
- அபிஷேக் ராஜா – ரூ.1.75 லட்சம்
- நமிதா மாரிமுத்து – ரூ.1.75 லட்சம்
- பிரியங்கா தேஷ் பாண்டே – ரூ.2 லட்சம்
- அபினய் – ரூ.2.75 லட்சம்
- பாவனி ரெட்டி – ரூ.1.25 லட்சம்
- சின்ன பொண்ணு – ரூ.1.5 லட்சம்
- நாடியா சாங் – ரூ.2 லட்சம்
- வருண் – ரூ.1.25 லட்சம்
- இமான் அண்ணாச்சி – ரூ.1.75 லட்சம்
- அக்ஷரா ரெட்டி – ரூ.1 லட்சம்
- சுருதி – ரூ.70,000
- ஐக்கி பெர்ரி – ரூ.70,000
- தாமரைச் செல்வி – ரூ.70,000
- சிபி – ரூ.70,000
- நிரூப் – ரூ.70,000
இந்த சம்பள விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.