நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது – தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கும் கவுரவம்!

0
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கும் கவுரவம்!
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கும் கவுரவம்!
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது – தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கும் கவுரவம்!

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டாராக கருதப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்றிருக்கும் முக்கிய திரைப்பிரபலங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

சினிமா விருதுகள்

ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த கலைஞர்களுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருதுகள் தான் ஒரு கலைஞனின் நடிப்பு கிடைக்கும் மரியாதையாக கருதப்படுகிறது. பொதுவாக பலரும் விருதுகளுக்காக நடிக்கவில்லை என்றாலும் விருதுகள் ஒரு கலைஞனை இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும், மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஊக்கத்தை வளர்க்கிறது.

திருமண கோலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – லைக்குகளை குவித்த ரசிகர்கள்!

அந்த வகையில் இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கும் கலைஞர்களுக்கான மத்திய அரசின் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவனில் வைத்து இன்று (அக்.25) நடைபெற்றது. இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் என கருதப்படும் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வாழ்நாள் சாதனையாளர் விருதாக வழங்கப்பட்டது. இந்த விருதினை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வழங்கியுள்ளார். இவரை தொடர்ந்து சில முக்கிய பிரபலங்கள் பெற்றுள்ள விருதுகளின் பட்டியல் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்,

  • சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருது வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படத்திற்கு கிடைத்தது. இவ்விருதை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு பெற்றார்.
  • மேலும் ‘அசுரன்’ படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு விருது வழங்கப்பட்டது.
  • ‘போன்ஸ்லே’ என்ற ஹிந்தி திரைப்படத்திற்காக நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
  • சிறந்த தமிழ் திரைப்பட நடிகருக்கான விருதை ‘அசுரன்’ படத்திற்காக நடிகர் தனுஷ் பெற்றுக்கொண்டார்.
  • ‘மணிகர்னிகா: ஜான்சி ராணி’ மற்றும் ‘பங்கா’ உள்ளிட்ட திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை கங்கனா ரனாவத் பெற்றுக்கொண்டார்.
  • சிறந்த துணை நடிகருக்கான விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்துக்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘விஸ்வாஸம்’ படத்துக்காக டி. இமான் பெற்றுக்கொண்டார்.
  • நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்கு ஜூரியின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
  • இந்த திரைப்படத்துக்கான சிறந்த ஒலிக்கலவை விருது ரசூல் பூக்குட்டி என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ‘கருப்புதுரை’ படத்தில் நடித்த மாஸ்டர் நாக விஷாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here