SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – OTP மூலம் ATMகளில் பணம் எடுக்கும் வசதி!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - OTP மூலம் ATMகளில் பணம் எடுக்கும் வசதி!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - OTP மூலம் ATMகளில் பணம் எடுக்கும் வசதி!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – OTP மூலம் ATMகளில் பணம் எடுக்கும் வசதி!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி (SBI) OTP மூலம் ATM இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் முறையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பணம் எடுக்கும் வசதி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல புதிய அம்சங்களை செயல்படுத்தி வருகிறது. அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல வகையான சேவைகளை அவர்களின் வீடு தேடி சென்று கொடுத்து வருகிறது. அந்த வகையில் மீண்டுமாக SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி ATM மூலம் பணம் எடுக்க OTP எண்ணை மட்டுமே பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

Jio நிறுவனம் வழங்கும் சூப்பர் தீபாவளி ஆபர் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இது தொடர்பாக SBI வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் SBI ATMகளில் இருந்து OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறை குறித்து ட்வீட் செய்துள்ளது. அந்த பதிவில், ‘SBI வங்கியில் ATM பரிவர்த்தனைகளுக்கான OTP பணம் எடுக்கும் முறை மோசடி செய்பவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பது எங்கள் முன்னுரிமை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. SBI வங்கியின் இந்த வசதி ATMகளில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளை தடை செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் – தெளிவுரை வெளியீடு!

SBI வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கு முன் அது எவ்வாறு செயல்படும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில்

  • முதலாவதாக, பரிமாற்றத்தின் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும் என்பதை SBI வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.
  • அந்த OTP ஐ உள்ளிட்டு வாடிக்கையாளர்கள் ATM லிருந்து பணத்தை எடுக்கலாம்.
  • இந்த OTP எண் என்பது நான்கு இலக்க எண்ணாகும்.
  • இது ஒரு ஒற்றை பரிவர்த்தனைக்கு பயனரை அங்கீகரிக்கிறது
  • இது SBI கார்டு வைத்திருப்பவர்களை அங்கீகரிக்கப்படாத ATMகளில் இருந்து பணம் எடுப்பதில் இருந்து பாதுகாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த ஜனவரி முதல் செயல்பட்டு வரும் இந்த சேவைகள் SBI ATMகளில் இருந்து ரூ.10,000 மற்றும் அதற்கு மேல் பணம் எடுக்கும்போது மட்டுமே பொருந்தும். இந்த OTP வசதி தொடர்பான ஏதேனும் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் வாடிக்கையாளர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!