குடித்து விட்டு போதையில் ஜனார்த்தனனை கொஞ்சும் ஜீவா – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஒளிபரப்பாக இருக்கும் இன்றைய எபிசோடில், குடித்துவிட்டு போதையில் மீனாவின் அப்பா ஜனார்த்தனனை ஜீவா கொஞ்சுவது போல வெளியான சில காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுமார் 800 எபிசோடுகள் கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக வெளியாகி கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் கிடைத்த அதே வரவேற்புகள் இன்று வரையும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கூட்டுக்குடும்ப கதைக்களத்துடன், அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகளும் ஒரு முக்கிய காரணமாகும்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ப்ரோமோ ரிலீஸ்!
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் வரும் மூர்த்தி, தனம், கதிர், முல்லை, ஜீவா, மீனா, கண்ணன் போன்ற அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் தேவையான விஷயத்தை சிறப்பாக செய்து வரும் நடிகர், நடிகைகள் ரசிகர்களின் பேவரைட் ஆக இருந்து வருகின்றனர். தவிர இந்த சீரியலில் நிறைய முக்கியமான கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றிருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் தனித்தனியான சீன்களும் கூட அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரவிருக்கும் எபிசோடு ஒன்றில் ஜீவாவாக நடித்து வரும் நடிகர் வெங்கட் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடை திறக்கப்பட்டதற்காக வீட்டில் உள்ள சில ஆண்கள் மது அருந்துகின்றனர். அந்த வகையில், ஜீவாவுக்கு, மீனாவின் அண்ணன் கைலாஷ் மது கொடுக்க அவர் குடித்து விட்டு புலம்ப ஆரம்பிக்கிறார். இப்போது அவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவதற்காக ஜனார்த்தனன் வருகிறார்.
‘குக் வித் கோமாளி’ மணிமேகலைக்கு நடந்த விபரீதம் – கதறி அழும் நண்பர்கள்! ரசிகர்கள் ஷாக்!
இவர்கள் இருவரும் காரில் வந்து கொண்டிருக்கும் வேளையில், குடி போதையில் இருக்கும் ஜீவா, ஜனார்த்தனனிடம் மாமா உங்களிடம் நிறைய நாள் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதை உங்களிடம் சொன்னதில்லை. சொன்னால் கோபித்து கொள்ள மாட்டீர்களே. உங்கள் மீசையை இப்படி முறுக்கி விடுங்கள். அப்போது தான் அழகாக இருக்கும் என்று அவரை கொஞ்சுவது போல வெளியான சில காட்சிகள் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.