‘குக் வித் கோமாளி’ மணிமேகலைக்கு நடந்த விபரீதம் – கதறி அழும் நண்பர்கள்! ரசிகர்கள் ஷாக்!

0
'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு நடந்த விபரீதம் - கதறி அழும் நண்பர்கள்! ரசிகர்கள் ஷாக்!
'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு நடந்த விபரீதம் - கதறி அழும் நண்பர்கள்! ரசிகர்கள் ஷாக்!
‘குக் வித் கோமாளி’ மணிமேகலைக்கு நடந்த விபரீதம் – கதறி அழும் நண்பர்கள்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ஷோ மூலம் பிரபலமடைந்த விஜே மணிமேகலை, தற்போது ஷாக் அடித்தது போல நடித்து தனது நண்பர்களை பிராங்க் செய்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குக் வித் கோமாளி

டிவி சேனல்களில் வாரம் முழுவதும் சீரியல்களை பார்த்து அலுத்து போகும் ரசிகர்களுக்கு வார இறுதியில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றால் சற்று உற்சாகமாகி விடுவது உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு வார இறுதியிலும் பல்வேறு டிவி சேனல்களிலும் வித்தியாசமான, வித விதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கவனம் பெற்றுள்ள ஒரு முக்கியமான ஷோ என்றால் அது ‘குக் வித் கோமாளி’ தான்.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நபர் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வருகிறது. இதுவரை 2 சீசன்களாக ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தற்போது புதிய பொலிவுடன் 3வது சீசனுக்குள் கடந்து வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டாலும் இதன் விஷேசமே கோமாளிகள் தான். அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களாக கோமாளியாக கலந்து கொண்டு வரும் விஜே மணிமேகலை ரசிகர்களின் மனம் கவர்ந்த கோமாளிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

‘குக் வித் கோமாளி’ செட்டில் கலகலப்புடன் காணப்பட்ட வரும் மணிமேகலை செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட்டை என் மாணவர்கள் என்று சொல்லி கலாய்ப்பது, பொருட்களை திருடுவது, வேலை செய்யாமல் திட்டு வாங்குவது, சமையலை கெடுப்பது, சூனியம் செய்வது போன்ற பல வேலைகளில் ஈடுபட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த நிகழ்ச்சி தவிர அவ்வப்போது சில வார இறுதி ஷோக்களில் ஆங்கராக இருந்து வரும் மணிமேகலை தனது பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

இந்த சேனலில் அவ்வப்போது சில ஸ்வாரசியமான வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர், தற் சமயம் வெளியிட்டுள்ள பிராங்க் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, மணிமேகலையின் வீட்டுக்கு அவரது நண்பர்கள் வந்திருக்க அவர்களுக்கு ஊர் சுற்றி காட்டுவதாக கூறி ஹுசைன் சென்றிருப்பதாக கூரும் மணிமேகலை, வீட்டில் இருக்கும் மற்றவர்களை கலாய்க்கும் விதமாக பிராங்க் செய்ய முடிவு செய்கிறார். இதற்காக ணிமேகலை அவரது தம்பியின் உதவியுடன் கேமராவை செட் செய்கிறார்.

கைலாஷ் உடன் சேர்ந்து தண்ணீ அடித்த ஜீவா, நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பிறகு தனது திட்டத்தை விளக்கி விட்டு சார்ஜ் போட செல்லும் அவர், தனக்கு ஷாக் அடித்தது போல மயங்கி கீழே விழுந்து விடுகிறார். அப்போது வீட்டுக்குள் வரும் அவரது நண்பர்கள் மணிமேகலையை எழுப்ப முற்படுகின்றனர். சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழ ஆரம்பித்துவிட மணிமேகலையின் தம்பியும் அவருடன் சேர்ந்து சிறப்பாக நடிக்கிறார். பிறகு ஒரு பாட்டி வந்து மணிமேகலை நடிப்பதாக கூற அந்த பிராங்கை அவர் முடித்து கொள்வது போல வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!