மார்பக கட்டியால் அவதிப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – அவரே வெளியிட்ட பதிவு!

0
மார்பக கட்டியால் அவதிப்படும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா - அவரே வெளியிட்ட பதிவு!
மார்பக கட்டியால் அவதிப்படும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா - அவரே வெளியிட்ட பதிவு!
மார்பக கட்டியால் அவதிப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – அவரே வெளியிட்ட பதிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தற்போது மார்பக நோயால் பாதிக்கப்பட்ட விஷயத்தையும், அதில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பதையும் தனது சமூக வலை பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக பிரபலமான ஹேமா, மீனா கதாபாத்திரத்தில் மக்களின் மனதில் நன்றாக பதிந்துவிட்டார். மேலும், ஷூட்டிங் இருந்தாலும் கூட சமூக வலை பக்கங்களில் நேரம் செலவிட்டு வருகிறார். தற்போது ஹேமா அதிர்ச்சி கலந்த ஒரு வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, ஹேமாவின் மார்பகத்தில் சிறிய கட்டி போல தோன்றியதால் உடனே பரிசோதனை செய்திருந்திருக்கிறார். அப்போது ஹேமாவின் மார்பகத்தில் 4சென்டிமீட்டர் அளவுக்கு கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

இந்த கட்டியை அலட்சியமாக எடுத்துக்கொண்டால் நாளடைவில் முழு மார்பகத்தையே வெட்டி எடுக்க வேண்டிய நிலைமை கூட ஏற்பட்டுவிடும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதனால், உடனடியாக ஆரம்ப கட்டத்திலேயே அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றியுள்ளார். மேலும், பெண்கள் தான் ஒரு குடும்பத்தின் ஊன்றுகோலாக இருக்கின்றனர். என்னதான் வேலையாக இருந்தாலும் உடல்நிலையை பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்களை பெரிதளவில் அச்சுறுத்தும் ஒரு நோயாக மார்பக புற்றுநோய் இருந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

ஆரம்பத்திலேயே இந்த கட்டியை கண்டறிந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அகற்றிவிடலாம். இதனால், பெண்கள் கண்டிப்பாக மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், இந்த மாதிரியான சமயங்களில் தான் பெண்கள் மன தைரியத்துடன் செயல்பட வேண்டும் எனவும் ஹேமா கூறியுள்ளார். இதனையடுத்து, அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமாக உள்ளதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கிலும் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!