தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

0
தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

தமிழகத்தில் சுமார் ரூ.3,494 ஆயிரம் கோடி செலவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

தொழில் முதலீடுகள்

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சுமார் ரூ.3,494 ஆயிரம் கோடி செலவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்ட இருப்பதாகவும், இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் சுமார் 34 தொழில்நுட்ப நிறுவனங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

Exams Daily Mobile App Download

இதற்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் ஜூலை 4ம் தேதியன்று தாஜ் ஹோட்டலில் வைத்து முதலமைச்சர் தலைமையில் தொழில் மாநாடு நடைபெற இருக்கிறது. இப்போது தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட இருக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள், சோலார் நிறுவனங்கள் ஆகியவை மீது முதலீடுகளை செய்துள்ளோம். இது வெறும் முதலீடுகளுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தை பன்னாட்டு அளவுக்கு கொண்டு போகவும், அரசின் நடவடிக்கைகளை தெரியப்படுத்தவும் முயற்சி எடுத்து வருகிறோம்.

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் – இந்த நிலை எப்போது மாறும்?

இதன் ஒரு பகுதியாக தான் முதல்வர் கடந்த மார்ச் மாதத்தில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதற்கிடையில், தமிழக முதல்வர் அறிவித்துள்ள நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதால் இது போன்ற பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயம், ஏரோ ஸ்பேஸ், ஆட்டோ மொபைல்ஸ், பேங்கிங், எனர்ஜி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் தொழில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சுமார் 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவு பெற்றுள்ளது. அதே போல கூடுதலாக 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது. இதனுடன் ரூ.3,494 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளின் மூலம் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here