விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா ஹேமா யார் தெரியுமா? ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் மீனா ஹேமா யார் தெரியுமா? ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா ஹேமா யார் தெரியுமா? ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ் யார் என்பது குறித்த முழு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பலரது மனதை கவர்ந்து நகைசுவை வில்லியாக வலம் வரும் ஹேமா யார் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை ஹேமா சதீஸ்:

தமிழ் சின்னத்திரையில் பலர் சீரியல் பார்க்கும் நிலையில் தினமும் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக சீரியல் மாறிவிட்டது. பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும், இறுதியில் மனம் கவர்ந்த சீரியல்கள் ஒரு சில மட்டுமே TRPயில் முதல் மூன்று இடங்களை பிடிக்கிறது. அந்த வகையில் இருக்கும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரம் இல்லாத இந்த சீரியலில், ஆங்காங்கே நகைசுவை வில்லியாக இருப்பவர் தான் மீனா கதாபாத்திரம்.

தனது குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – சீரியலில் இருந்து இடைவெளி?

என்ன தான் சண்டைக்கு முதல் காரணமாக இவர் இருந்தாலும் தன்னுடைய அம்மா வீட்டில் கூட குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். அதனால் தான் மீனா கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மீனாவாக நடிகை ஹேமா சதீஸ் நடித்து வருகிறார். அவர் நடிப்புத் துறைக்கு வர வேண்டும் என்ற ஆசையால் தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி பல இடங்களில் வாய்ப்பிற்காக சென்றாராம். அதன் பின் அவருக்கு கனா காணும் காலங்கள் வாய்ப்பு வந்தும் அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லையாம்.

புதிதாக சொகுசு கார் வாங்கிய ‘ராஜா ராணி 2’ சீரியல் சித்து, ஸ்ரேயா ஜோடி – குவியும் வாழ்த்துக்கள்!

பின் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக அவருக்கு வாய்ப்பு கிடைக்க அதன் மூலம் தான் சின்னத்திரையில் கால் பதித்தாராம். அதன் பின் சில சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் நல்ல வரவேற்பை கொடுத்தது. அவர் நடிப்பு மட்டுமல்லாமல் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பல வீடியோக்களை பதிவிட்டு ஆயிர கணக்கில் சப்ஸ்கிரைப்பர்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!