தனது குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – சீரியலில் இருந்து இடைவெளி?

0
தனது குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட
தனது குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட "பாண்டியன் ஸ்டோர்ஸ்" கண்ணன் - சீரியலில் இருந்து இடைவெளி?
தனது குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – சீரியலில் இருந்து இடைவெளி?

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கடை குட்டி தம்பியாக நடித்து வரும் சரவண விக்ரம் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. இதுவரை எந்த சீரியலிலும் காட்டப்படுவது போல இல்லாமல் உண்மையான குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டே கதை இருக்கிறது. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்கள் பல கதையுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். தனமாக நடிகை சுஜிதா, மூர்த்தியாக நடிகர் ஸ்டாலின் முத்து இணைந்து நடித்து வருகின்றனர்.

புதிதாக சொகுசு கார் வாங்கிய ‘ராஜா ராணி 2’ சீரியல் சித்து, ஸ்ரேயா ஜோடி – குவியும் வாழ்த்துக்கள்!

மேலும் குமரன் கதிர் கதாபாத்திரத்திலும், காவ்யா முல்லை கதாபாத்திரத்திலும், வெங்கட் ஜீவா கதாபாத்திரத்திலும், மீனா கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா சதீஸ் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கடைசி தம்பியாக கதையில் திருப்பம் கொண்டு வந்த கண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் சரவண விக்ரம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகை சாய் காயத்ரி நடித்து வருகிறார். கண்ணன் கதாபாத்திரத்தால் தான் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் மத்தியில் விரிசல் ஏற்பட்டது.

விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் “கல்யாணம் கல்யாணம்” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில் சரவண விக்ரம் அவருடன் நடித்த விஜே தீபிகா உடன் இணைந்து வெப் சீரீஸ், குறும்படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தீபிகா உடன் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவார், அந்த வகையில் அவர் சீரியலில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று அங்கே தரிசனம் செய்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here