விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் “கல்யாணம் கல்யாணம்” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், பல புதிய சீரியல்கள் களமிறங்க இருக்கின்றனர். தற்போது புதிதாக “கல்யாணம் கல்யாணம்” என்ற சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கல்யாணம் கல்யாணம் ப்ரோமோ:
தமிழ் சினிமாவை விட சீரியலை ஏகப்பட்ட ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். காரணம் சினிமா என்றால் 2 மணி நேரத்தில் முடிவு வந்துவிடும். ஆனால் சீரியல் அப்படி இல்லை. தினமும் பல திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர்கள் அந்தந்த கதாபாத்திரமாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஐஸ்வர்யா தீபிகாவிற்கு விரைவில் திருமணம்? அவரே சொன்ன விளக்கம்!
சீரியல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்த பல புதிய சீரியல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் கதை சுருக்கத்தை ப்ரோமோவாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை உண்டாகி பின் சீரியலை ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் புதிய சீரியல் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதற்கு “கல்யாணம் கல்யாணம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் ஷபானா, பாரதி கண்ணம்மா அருண், பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். மேலும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யாவும் நடிக்கின்றனர். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனால் அது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோவாக இருந்ததாலும் இந்த நடிகர்கள் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.