சமையல் பாத்திரம் கழுவும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா, கலாய்க்கும் ஐஸ்வர்யா – வைரலாகும் வீடியோ!

0
சமையல் பாத்திரம் கழுவும்
சமையல் பாத்திரம் கழுவும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மீனா, கலாய்க்கும் ஐஸ்வர்யா - வைரலாகும் வீடியோ!
சமையல் பாத்திரம் கழுவும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா, கலாய்க்கும் ஐஸ்வர்யா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நகைச்சுவை வில்லியாக மீனா கதாபாத்திரத்தில் கலக்கி வரும் ஹேமா சதீஸ் சமையல் பாத்திரம் கழுவ அதை ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி கலாய்த்து இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல மொழிகளில் வெற்றி கண்ட சீரியல் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தமிழ் சின்னத்திரையில் நல்ல ஒரு குடும்ப சீரியலாக இருக்கிறது. அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நடுத்தரக் வர்க்கத்தின் வாழ்க்கை முறையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. இந்த சீரியலில் மூர்த்தி, தனம், ஜீவா, மீனா, முல்லை, கதிர், கண்ணன், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இனியா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!

முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற செய்தியால் குடும்பமே வருத்தத்தில் இருக்கின்றனர். மூர்த்தி தனமும் கஷ்டப்பட்டு முல்லைக்கு செயற்கை முறையில் குழந்தை பிறக்க செய்யலாம் என முயற்சிகளை செய்கிறார். ஆனால் அதற்கு நிறைய செலவாகும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் குடும்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் அனைவரும் முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என ஆவலுடன் இருக்க ஆனால் மீனாவிற்கு அது பிடிக்கவில்லை.

அதிகமாக செலவு ஆகும் என்பதால் மீனாவிற்கு பிடிக்காமல் இருக்கிறது. அடிக்கடி தடங்கல் சொன்னாலும் அதை வெளிப்படையாக பேசாமல் இருக்கிறார். நகைச்சுவை வில்லியாக காட்டப்படும் மீனா கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் மீனா பாத்திரம் கழுவ ஐஸ்வர்யா அதை பார்த்து கலாய்க்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோ ஏகப்பட்ட ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!