ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை காஜல் அகர்வால் – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் பதிவு!

0
ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை காஜல் அகர்வால் - ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் பதிவு!ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை காஜல் அகர்வால் - ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் பதிவு!
ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை காஜல் அகர்வால் - ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் பதிவு!
ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை காஜல் அகர்வால் – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் பதிவு!

சினித்துறையில் முன்னணி நடிகையாக இருந்து வரும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காஜல் அகர்வால்:

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் காஜல் அகர்வால் முன்னனி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகர் பரத்துடன் இணைந்து நடித்த ”பழனி” என்கிற திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரையுலகில் நுழைந்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பொம்மலாட்டம், நான் மஹான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல், கோமாளி ஆகிய பல தமிழ் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அம்மா ஆலியாவுடன் குதித்து விளையாடிய ஐலா பாப்பா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் திரையுலகில் அறிமுகமான சில வருடங்களிலேயே அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபரான கவுதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு காஜல் திரைப்படங்களில் நடிக்க அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இதற்கு பிறகு காஜல் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

பாரதியுடன் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ள கண்ணம்மா – துரத்தி விட பிளான் போடும் பாரதி!

மேலும், அவ்வப்போது கர்ப்பமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைப்பக்கங்களில் பதிவிட்டபடி இருந்தார். மேலும், குடும்பத்தினர்கள் அனைவரும் காஜலுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி வளைகாப்பை நடத்தினர். வளைகாப்பு புகைப்படங்களுமே வலைதள பக்கங்களில் பரவி வந்தது. தற்போது காஜல் அகர்வால் அழகான ஒரு ஆண் குழந்தையை ஈண்டெடுத்துள்ளார். திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் காஜல் மற்றும் கவுதம் கிச்சுலுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ரசிகர்கள் குழந்தையின் முகத்தை காட்டும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!