அம்மா ஆலியாவுடன் குதித்து விளையாடிய ஐலா பாப்பா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
ஆலியாவிற்கு தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சீரியலில் இருந்து நிரந்தரமாக ஆலியா விலகியுள்ளார். தற்போது ஐலா பாப்பாவுடன் ஆலியா குதித்து விளையாடும் படியான வீடியோ ஒன்று சமூக வலைப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.
ஐலா பாப்பா:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியலின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்து சில நாட்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்க வேண்டும் என ஆர்வமாக இருந்தார். அதற்கு பிறகு தான் ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜாராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார்.
விஜய் டிவி “ஈரமான ரோஜாவே” நடிகர் திரவியத்திற்கு கிடைத்த வாய்ப்பு – ரசிகர்கள் வாழ்த்து மழை!
ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதும் ஐலா பாப்பாவை சரியாக கவனித்து வந்தார். ஷூட்டிங்கிற்கே ஐலா பாப்பாவை அழைத்து சென்றுவிடுவார். ஐலா பாப்பாவிற்கு தாய்ப்பாலில் ஆபரணம் செய்து பரிசாக கொடுத்திருக்கிறார். ராஜா ராணி தொடரில் நடித்து கொண்டிருந்த போதே ஆலியா மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் ஆலியா சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் நடித்து வந்தார்.
குழந்தை பிறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி தொடரில் இருந்து விலகினார். ஐலா பாப்பாவின் இரண்டாவது பிறந்தநாள் அன்றே ஆலியாவிற்கும் வளைகாப்பு நடைபெற்றது. தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தையாக இருந்தால் அர்ஷ் எனவும், பெண் குழந்தையாக இருந்தால் லைலா எனவும் பெயர் வைக்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி இரண்டாவது குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். தற்போது ஐலா பாப்பா பிறந்ததில் இருந்து எடுக்கப்பட்ட அழகான பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.